Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அம்மன் பாமாலை -{மஞ்சள் முகத்தழகும், மீன் கொடிபறக்கவே உட்பட 21 பாடல்கள்} ( lyrics in comments) в хорошем качестве

அம்மன் பாமாலை -{மஞ்சள் முகத்தழகும், மீன் கொடிபறக்கவே உட்பட 21 பாடல்கள்} ( lyrics in comments) 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அம்மன் பாமாலை -{மஞ்சள் முகத்தழகும், மீன் கொடிபறக்கவே உட்பட 21 பாடல்கள்} ( lyrics in comments)

To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - https://t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாகக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதுண்டு.அவை, வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள், ஆஷாட நவராத்திரி - ஆனி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள், சாரதா நவராத்திரி - புரட்டாசி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள், ஷ்யாமளா நவராத்திரி - தை மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஒன்பது நாட்கள். இதில் மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி ஆகும்.முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் மூவரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி.அந்த வெற்றியைக் குறிக்கும் விதமாக, பத்தாவது நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம்,நடுவில் உள்ள மூன்று நாட்களும் கிரியாசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்,இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். ஆன்மீக முன்னேற்றத்தின் வெவ்வேறு கட்டங்கள் நவராத்திரி கொண்டாட்டங்களில் பிரதிபலிக்கின்றன.முதலாவதாக, எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்; இரண்டாவதாக, நல்லொழுக்கங்கள் வேரூன்ற வேண்டும், தேவையான மன தூய்மையைப் பெற்ற பிறகு, மூன்றாவதாக ஆன்மீக அறிவைப் பெற வேண்டும்.அப்போது ஆன்மீக வெளிச்சத்தை அடையலாம். நவராத்திரி என்பது ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல; இது சதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுவதற்கான பாடத்தைக் கற்பிக்கிறது.ஒரு மனிதன் வாழ்வின் தடைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின் அடையாளமான துர்கையை வழிபட வேண்டும்.அதே போன்று வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் பெற லட்சுமியை பிரார்த்தனைச் செய்ய வேண்டும்.மேலும் அறிவைப் பெறுவதற்காக சரஸ்வதியை வணங்க வேண்டும். இந்த மூன்றும் ஒரு முழுமையான உலக வாழ்க்கைக்கு அவசியமானவை. உண்மையில், நாம் இவ்வாறு வணங்கும் போது நமக்குள் இருக்கும் சக்தி தூண்டப்படுகிறது. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வது சிறப்பானதாகும். இப்படிப் பல சிறப்புகளையுடைய நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, கவிஞர் குரள் இலக்குவன் அவர்களின் அம்மன் பாமாலை என்னும் இப்பாடல் தொகுப்பினை வழங்குகிறோம்.எதிர் வரும் அனைத்து இன்னல்களையும் களைய, 21 சக்தி வடிவங்களை பாடி,பாமாலையாக அருளியுள்ளார் கவிஞர். அவை, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி(பெங்களூரு), காமாட்சியம்மன்(காஞ்சிபுரம்), விசாலாட்சி அம்மன்(காசி), மீனாட்சி அம்மன்(மதுரை), அகிலாண்டேஸ்வரி(திருவானைக்காவல்), சிவகாமி அம்மன்(சிதம்பரம்), கொப்புடையம்மன்(காரைக்குடி), காந்திமதி அம்மன்(நெல்லை), அபிராமி அம்மன்(திருக்கடவூர்), கருமாரி அம்மன்(திருவேற்காடு), மாரியம்மன்(சமயபுரம்), துர்கையம்மன்(சிவகங்கை), கற்பகாம்பாள்(மயிலை), அலமேலு மங்கை(திருச்சானூர்), தையல் நாயகி(வைத்தீஸ்வரன் கோயில்), பகவதி அம்மன், வடியுடையம்மன்(திருவொற்றியூர்), பவானியம்மன்(பெரிய பாளையம்), முத்துமாரியம்மன்(காரைக்குடி), முத்தாளம்மன்(காரைக்குடி), திரிபுரசுந்தரி(திருவான்மியூர்). நாமும் அவற்றை பாடி/கேட்டு அன்னையின் அருள் பெறுவோம் Poet : Kural Ilakuvan Singer : Akila Natesan Editor : Bharane Chidambaram Description : Vishalakshi Meyyappan Mani Venkatachalam

Comments