Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மீனாட்சியம்மன் பாமாலை -- Meenakshi Amman Pamalai-- (Lyrics in Comments Section) в хорошем качестве

மீனாட்சியம்மன் பாமாலை -- Meenakshi Amman Pamalai-- (Lyrics in Comments Section) 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மீனாட்சியம்மன் பாமாலை -- Meenakshi Amman Pamalai-- (Lyrics in Comments Section)

தினம் தினம் திருவிழா என்று ஆன்மிகப் பரவசத்திற்கு பஞ்சமில்லா மாநகரம் மதுரை. ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது.மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான்.'மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை' என்று சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படும் தலம் இது. இதற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்றும் பெயர்.அகிலத்தையே ஆளும் கயல்விழியாள் மீனாட்சி இக்கோயிலில், நின்ற கோலத்தில், பாத்திரம் பார்க்காமல் அருள் வழங்குகிறாள்.இங்கு அரசாட்சி செய்யும் அன்னை மீனாட்சிக்கு அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி என்கிற திருநாமங்களும் உண்டு.இங்கு மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர்; வலது தோளில் பச்சைக் கிளி; இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ்சிறுமியின் முகம் என எழில் கொஞ்சும் திருவடிவாக அருள் காட்சி தருகிறாள் அன்னை மீனாட்சி. இறைவன் சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தாேடு அருள் பாலிக்கிறார். சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். அழகே வடிவான ஈஸ்வரன் என்பதால் சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் மதுரையை ஆண்டு ராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளை ஏற்ற இறைவன் கால் மாறி ஆடியதும் (இடது காலை ஊன்றி, வலது கால் தூக்கி ஆடிஅருளியதும்) இங்கு தான். மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், ஆகையால் இத் தலம் பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தலத்தின் பெருமையும், இங்கு அரசாட்சி புரியும் மீனாட்சியின் பெருமையும் எவ்வளவு உரைத்தாலும் வார்த்தைகள் வீழுமே அன்றி, முழுவதுமாய் உரைக்க எவராலும் முடியாது. கடலைக் கண்டு வியக்கும் பாலகன் போல இத் தலத்தின் பெருமையைக் கண்டு வியக்கலாமேயன்றி முழுவதுமாகக் கூறமுடியாது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது சித்திரை திருவிழா. சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேர் பவணி ஆகியவை புகழ்பெற்றவை. நவராத்திரி, ஆவணி மூலத் திருவிழா, தை தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விஷேச நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இவ்வாறு இன்னும் பல பெருமைகளைக் காெண்ட மதுரையைப் பற்றியும் அன்னை மீனாட்சியைப் பற்றியும் புகழ் பாடும் இந்த மீனாட்சியம்மன் பாமாலையை நாமும் பாடி/கேட்டு அருள் பெறுவாேம். Singer : Akila Natesan Editor : Bharane Chidambaram Description : Mani Venkatachalam Vani Palaniappan "Lyrics is given in comments section due to space constrain in description section"

Comments