Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அந்நியரால் அழிக்கப்பட்ட ஹளபேட்டில் நிறைந்திருக்கும் அழகு சிற்பங்கள் HALEBEEDU HOYESHALESHWARA TEMPLE в хорошем качестве

அந்நியரால் அழிக்கப்பட்ட ஹளபேட்டில் நிறைந்திருக்கும் அழகு சிற்பங்கள் HALEBEEDU HOYESHALESHWARA TEMPLE 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அந்நியரால் அழிக்கப்பட்ட ஹளபேட்டில் நிறைந்திருக்கும் அழகு சிற்பங்கள் HALEBEEDU HOYESHALESHWARA TEMPLE

அந்நியரால் அழிக்கப்பட்ட அளபேட்டில் நிறைந்திருக்கும் அழகு சிற்பங்கள் ஆச்சரியத்தை உண்டாக்கும் அழகு சிற்பங்கள் நிறைந்த ஹலபேடு அனைவருக்கும் வணக்கம் நான் மோகன்ராஜ் கண்களின் புருவங்களை உயர்த்தி ஆச்சரியத்தை உண்டாக்கும் இந்த அழகு சிற்பங்கள் எங்கு நிறைந்திருக்கின்றன என்ற வினா உங்கள் மனதிற்குள் தோன்றுகிறதா ஆம் என்றால் இது கர்நாடக மாநிலத்தின் ஆசன் மாவட்டத்தில் உள்ள ஹலபேடு ஹலபேடு எனும் பெயரைக் கொண்டு விளங்கும் இந்நகரம் முன்பு துவார சமுத்திரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இந்நகரம் ஹொய்சாலர்களின் பண்டைய தலைநகரம் ஹொய்சாலர்கள் சுமார் 200 ஆண்டு காலம் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் இது போன்ற அழகிய கண்கவர் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஹளபேடு என்பதற்கு பழைய வீடு அல்லது பழைய இடிபாடுகள் என்பது பொருள். மாலிக் கபூர் படையெடுப்பின் காரணமாக இந்நகரம் கைவிடப்பட்ட நகரமானதால் இப்பெயரை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹொய்சாலர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இத்திருகோவில் ஒரு சைவத்தலமாகும். இங்குள்ள இறைவன் ஹொய்சாலிஸ்வரர் என அழைக்கப்படுகிறார் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்திருக்கோவில் நுணுக்கமான சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சிற்பங்கள் வடிக்க ஏதுவான சிறப்புமிக்க கற்களால் இத்திருக்கோவில் ஆக்கப்பட்டுள்ளது இத்திருத்தலமானது நட்சத்திர வடிவ அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது இத்திருக்கோயிலின் அடிப்பகுதியில் யானைகள் சிங்கங்கள் குதிரைகள் மலர்சுருள்கள் போன்றன தொடர் வரிசையான சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத்கீதையின் காட்சிகள் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சிறியது முதல் பெரியது வரையிலான பல ஆயிரக்கணக்கான சிற்பங்கள் இத்திருக்கோயிலில் வடிக்கப்பட்டு கண்களுக்கு கவிமிகு காட்சி தருகின்றன. இக்கோயிலின் உட்புறமாக பிரம்மாண்டமான பெரிய வடிவிலான மென்மையாக நன்கு பாலிஷ் செய்யப்பட்ட தூண்கள் நிறுவப்பட்டுள்ளன பேலூரில் உள்ள வைணவ திருத்தளமான சென்ன கேசவர் திருத்தலத்தைப் போன்று ஒத்திருக்கும் இத்திருக்கோவில் ஒரு ஆச்சரியங்களின் அற்புத புதையல் என்று அழைக்கலாம். HALEBEEDU HOYESHALESHWARA TEMPLE, halebidu temple, halebidu temple history in tamil, halebidu hoysaleswara temple, halebeedu hoysaleshwara temple, hoysala temple halebidu, ஹொய்சாளர்கள், ஹளபேடு, ஹொய்சாலீஸ்வரர் திருக்கோயில்,

Comments