Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஸ்ரீ காடேரி அம்மன் பதிகம் -- Sri Kaderi Amman padigam (lyrics below) в хорошем качестве

ஸ்ரீ காடேரி அம்மன் பதிகம் -- Sri Kaderi Amman padigam (lyrics below) 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஸ்ரீ காடேரி அம்மன் பதிகம் -- Sri Kaderi Amman padigam (lyrics below)

நமது நகரத்தார் பெருமக்களின் குலதெய்வங்களுள் ஒன்றான காடேரி அம்மனை பற்றியும் அம்மன் வீற்றிருக்கும் பெத்த பெருமாள் காடேரி அம்மன் கோவில்களைப் பற்றியும் சில தகவல்களை இங்கு காண்போம். காரைக்குடி- அறந்தாங்கி சாலையில், கீழாநிலைக்கோட்டைக்கு அருகில், சுமார் முக்கால் கி.மீ. தொலைவில் உள்ளன இவ்விருகோவில்களும். பெத்த பெருமாள் கோவிலில் மூலவராக ராமச்சந்திர மூர்த்தியும் காடேரி அம்மன் கோவிலில் காடேரி அம்மனும் அருள் பாலிக்கிறார்கள். இங்கு பெத்த பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளுக்கு பால் பள்ளயம் போடும் வேளையில் காடேரி அம்மன் கோவிலிலுள்ள பெருமாளுக்கு கிடாய் வெட்டி பள்ளயம் போடும் விந்தையையும் காணலாம் . கருவறையில் ராமச்சந்திர மூர்த்தியும் சீதா பிராட்டியும் உள்ளனர். அதையொட்டி பெத்த பெருமாள், நொண்டிக் கறுப்பர், சாமுண்டி எனப் பல மூர்த்தங்கள் உள்ளன. மேலும் அதே வளாகத்தினுள் தனியாக விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. அங்கு காசி விஸ்வநாதர், சித்தி விநாயகர், முன்னோடி போன்ற மூர்த்தங்கள் உள்ளன. காடேரி அம்மன் கோவிலில் கருவறையை அடுத்து பெத்த பெருமாள் சந்நிதி, மதுரை வீரன் சந்நிதி, தூண்டி நயினார், உத்தண்டராயர், கல்யாணராமன் ஆகிய சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. பெத்த பெருமாள் இரு கோவில்களிலும் இரு தேவியருடன் காணப்படுகிறார். இரு கோவில்களுக்கும் இடையில் வீரப்ப சுவாமி, நொண்டி அய்யா, பொற்பனை முனி ஆகியவை உள்ளன.இங்கு மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. இவற்றைத்தவிர சித்திரை, ஆடி, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் சிறப்புப்பூசைகள் நடைபெறுகின்றன. இந்த நான்கு பூசைகளிலும் ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டப்பட்டு, செவ்வாய்க்கிழமை பால் பள்ளயம் போட்டுப் படைக்கப் படுகின்றது. பின், இரவு சுவாமி எழுந்தருளுவார். இந்த காடேரி அம்மன் நகரத்தார்களுக்கு மட்டுமல்லாது அருகிலுள்ள கிராம மக்கள் பலருக்கும் குலதெய்வமாக விளங்கிகிறது. இவ்வாறு பல விந்தைகளையும் சிறப்புகளையும் கொண்ட காடேரி அம்மனை நாமும் வணங்கி அருள் பெறுவோம். Singer : Akila Natesan Editor : Bharane Chidambaram Description : Mani Venkatachalam Vani Palaniappan Lyrics is in comment section due to space constraint.

Comments