У нас вы можете посмотреть бесплатно Parambikulam Jungle & Safari Ride | Topslip | பரம்பிக்குளம் சுற்றுலா | டாப் சிலிப் | или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Topslip online Booking : https://www.atrpollachi.com Parambikulam Online Booking : https://www.parambikulam.org #parambikulam #topslip #safari #jungle #keralatourism #bus #kerala #tamil பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக டாப்சிலிப் கடந்து தான் இப்பகுதிக்கு செல்ல முடியும். பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை சாலையில் இருபுறமும் அடர்ந்து வளர்ந்து, குடை போல சாலையை மூடியிருக்கும் நிழல் பரப்பி இருக்கும் புளியமரங்களுக்கு இடையே பயணித்தால் ஆனைமலை மலைத்தொடர்கள் வரவேற்கும். சேத்துமடை தாண்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக வளைந்து நெளிந்து செல்லும் சாலை டாப்சிலிப்பிற்கு அழைத்துச் செல்லும். இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. நான்கு சக்கர வாகனம் அல்லது பேருந்தில் தான் செல்ல முடியும். தமிழ்நாடு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதியிலும் சுற்றுலா செல்லலாம். காடுகளுக்குள் சவாரி, யானை சவாரி, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு நேரம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், நேரடியாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு சென்று விடலாம். பரம்பிக்குளம் அணை பரம்பிக்குளம் சுற்றுலாவிற்கு மட்டுமல்ல, தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இடமாகவும் உள்ளது. ஆசியாவின் பொறொயியல் அதிசயம் என புகழப்படும் பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின் உயிர் நாடியான பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 3 அணைகள் இப்பகுதியில் உள்ளன. இந்த அணைகள் தான் மேற்கு மண்டல விவசாயிகளின் வாழ்வாதரமாக இருந்து வருகிறது. காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைகள், கேரள மாநிலத்திற்குள் இருந்தாலும் தமிழ்நாடு அரசே பராமரித்து வருகிறது. காடுகளுக்குள் சவாரி யானைப்பாடியில் சவாரி செல்வதற்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வனத்துறை வாகனத்தில் 3 மணி நேரத்தில் மொத்தம் 54 கி.மீ. தூரம் காடுகளுக்குள் பயணம். 5 இடங்களுக்கு தான் அழைத்துச் செல்கின்றனர். என்றாலும் வழியெங்கும் கூட்டம் கூட்டமாக மான்களும், காட்டு மாடுகளும் காட்சி தரும். அவ்வப்போது யானைகளை சந்திக்க முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் பார்க்க வாய்ப்புள்ள வனப்பகுதி அற்புதமான அனுபவங்களை தரக்கூடியது. வனத்துறை வாகனம் ஆட்களை ஏற்றிக் கொண்டு மூங்கில்களும், தேக்கு மரங்களும் நிறைந்த வனச்சாலையில் பயணித்து, தூணக்கடவு அணை முன்பாக நின்றது. மலையடிவாரத்தில் நிறைந்து கிடக்கும் அணை முன்பாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதில் சுவராஜ்ஜியமாக விஷயம் என்னவெனில், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் இரண்டு அணைகளும் இரட்டை அணைகள். ஒரு அணையில் நீர் அதிகரித்தால், மற்றொரு அணையிலும் அதே அளவு நீர் அதிகரிக்கும். நீர் குறைந்தாலும், அதே அளவு மற்றொரு அணையிலும் குறையும். அடுத்து தூணக்கடவு அணை காட்சி முனை பார்த்தபடி சென்றால், பரம்பிக்குளம் வரும். அங்கு உணவகங்கள் உள்ளன. மீன் குழம்பு சுவைக்கவே வரும் பலர் உண்டு. ‘ஆச்சரிய வனம், அதிசய அணைகள், ஆதி கன்னிமாரா தேக்கு’ - பரம்பிக்குளம் சுற்றுலா விபரங்கள் முழுதும் இந்த வீடியோவில்...