Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அருள்மிகு ஏகநாதர் திருக்கோயில் / அருளானந்த சித்தர் ஜீவசமாதி /கிண்ணிமங்கலம்/செக்கானூரணி/மதுர கூடல்/TN в хорошем качестве

அருள்மிகு ஏகநாதர் திருக்கோயில் / அருளானந்த சித்தர் ஜீவசமாதி /கிண்ணிமங்கலம்/செக்கானூரணி/மதுர கூடல்/TN 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அருள்மிகு ஏகநாதர் திருக்கோயில் / அருளானந்த சித்தர் ஜீவசமாதி /கிண்ணிமங்கலம்/செக்கானூரணி/மதுர கூடல்/TN

Sri Eganathar AnanthaValli Amman Temple, Kinnimangalam Google Map : https://goo.gl/maps/GapfWWTjpCPaS64X9 WXFJ+5HM, Kinnimangalam, Tamil Nadu 625514 மதுரை மாவட்டம் - செக்கானூரணி அருகில் உள்ளது கிண்ணிமங்கலம். இங்குள்ள ஏகநாதர் கோவிலில், சித்தர் ஜீவசமாதி உள்ளது. தல வரலாறு:நீண்டகாலத்திற்கு முன்னாள் அருளானந்த சற்குரு அவர்கள் தன் தவவழிமையால் அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்று தான் ஜீவ சமாதி அடைவதற்குரிய காலம் கனிந்துவர தான் சமாதிநிலை அடைவதற்கான யோகபூமியைத் தேர்தெடுக்கத் திருவுளம் கொண்டார். நாகமலையில் நாகதீர்தத்திற்கு அருகாமையில் தவம் செய்து வந்தார். அப்பொழுது அங்கு மாடு மேய்க்கவரும் சிறுவனிடம் தூரில்லாத காந்தக் கிண்ணியைக் கொடுத்து காராம்பசுவில் பால் கரந்துவருமாறு கூறியுள்ளார். வியப்படைந்த அச்சிறுவன் ஓட்டைக் கிண்ணியில் எப்படி சாமி பால் கரந்து வரமுடியுமெனக் கேட்டான். அதற்கு சுவாமிகள் போய் கரந்துபார் என்றார். சிறுவனோ தயக்கத்துடன் சென்று பாலைக்கரக்க அப்பால் ஒரு துளி கூட சிந்தாமல் கிண்ணி நிரம்பியது. ஆச்சரியம் அடைந்த சிறுவன் சுவாமி அவர்களிடம் பாலைக் கொடுத்து வணங்கினான். பின்னர் வீடு திரும்பிய அச்சிறுவன் அன்று நடந்த அதிசியத்தை ஊர்மக்களிடம் கூறினான். அது கேட்ட மக்கள் அனைவரும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். இச்செய்தி காடுத்தீ போல சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் பரவியது.நாகமலையைச் சுற்றியுள்ள பல கிராமத்தினர் திரண்டு சென்று சுவாமி அவர்களை வணங்கி அருளாசி பெற்றனர். பின்னர் ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள் வேண்டுகோலை ஏற்றுக் கொண்ட சுவாமிகள் தாம் எந்த இடத்திற்கு வரவேண்டுமென்பதை இந்த காந்தக் கிண்ணி தீர்மானிக்கும் எனக்கூறி சக்திவாய்ந்த இந்தக் காந்த கிண்ணியை இங்கிருந்து எறிகிறேன் அது எங்கு விழுகிறதோ அங்கு தான் நான் வந்து தங்கி அங்கேயே ஜீவசமாதி அடையவும் திருவுளங்கொண்டுள்ளேன் எனக்கூறினார். அதுகேட்டு அங்கிருந்த கிராமத்தினர்கள் எல்லாம் தத்தமது ஊருக்கு அந்தப் பேரு கிடைக்கவேண்டுமென மனமுருகி வேண்டினர். சுவாமிகள் அருள் நிறைந்த அந்த காந்தக் கிண்ணியை ஆனந்தமாக ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்தார். அந்தக் கிண்ணியோ மங்கலப்பட்டி என்று வழங்கப்பட்ட ஊருக்கு அருகில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் பலத்த சங்குநாதம் அவ்விடத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பித்தது. அங்கு கூடி இருந்த மக்கள் எல்லாம் சங்கொலியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். அங்கு கிண்ணியைக் கண்ட மக்கள் ஆனந்தத்தில் கூத்தாடினர். சுவாமி அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வந்தனர்.கிண்ணி வந்து விழுந்ததால் அன்று முதல் அந்த இடம் கிண்ணிமங்கலம் என்ற திரு நாமத்தால் வழங்கப்படுகிறது. சுவாமிகள் அங்குள்ள குட்டிச் சுவரில் அமர்ந்து கொண்டு கூடி இருந்தவர்களுக்கெல்லாம் மண்ணை அல்லி அவரவர் விரும்பிய பதார்த்தங்களை தன் அஷ்டமாசித்தியால் வரவழைத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த மன்னன் தான் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி இல்லாமல் கூட்டமாகக் கூடி நின்ற மக்களை பார்த்து வெகுண்டேழுந்தான். இதற்கு காரணமான சுவாமி அவர்களிடம் வந்த மன்னன், ஒரு குட்டி சுவரில் அமர்திருக்கும் சாமியாராகிய உனக்கு அவ்வளவு செருக்கா! நான் வருவது கூட உன் கண்களுக்குத் தெரியவில்லையா? எனக் கோபத்துடன் கேட்டான். அது கேட்ட சுவாமிகள் ஆனந்தப் புன்னகையுடன் தான் அமர்திருந்த குட்டிச் சுவரை தன் திருகரத்தால் தட்டினார் அவரது தவவலிமையால் குட்டி சுவரு கடிவேகக் குதிரையானது. இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் ஆச்சரியமும் கோபமும் அடைந்தான். எங்கே உன் குதிரையையும் என் குதிரையையும் ஓடவிடுவோம் எந்த குதிரை ஜெயிக்கிறது என பார்ப்போம் என்றான். போட்டிக்கு ஒத்துக்கொண்டார் சுவாமிகள். இரு குதிரைகளையும் ஓடவிட்டனர். சுவாமி அவர்களின் குதிரையோ சற்று தூரம் ஓடுவதும் சற்று விண்ணில் பறப்பதும் பின்னர் தரையில் ஓடுவதுமாக அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.தரையில் ஓடும் குதிரையைப் பார்த்திருக்கிறேன் விண்ணில் பறக்கும் அதிசயக் குதிரையை இங்கு தான் கண்டேன் என கூறி சுவாமி அவர்களின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கித் தான் அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருளுமாறு வேண்டி நின்றான். அருள்நிறை அமுதக்கடலான ஸ்வாமிகள் ஆனந்த புன்னகையுடன் தன் தவறை உணர்ந்த மன்னனை மன்னித்து அருளாசி வழங்கினார்கள். மன்னன் சுவாமி அவர்களிடம் பணிவுடன் தங்களுக்கு ஏதாவது திருப்பணி செய்யவிரும்புவதாகக் கூறி, சுவாமி அவர்களின் கட்டளையை வேண்டி நின்றான். சுவாமி அவர்கள் அவன் வேண்டுகோளை ஏற்று தான் ஜீவா சமாதி அடைய உள்ளதாகவும் அதற்கு அழகிய திருகோயிலை நிர்மானிக்கும் படி பணித்தார். மேலும் மடாலாயத்திற்கு மானியமாக தன் குதிரை கால் பதித்து வட்டமிட்ட நிலத்தினை வழங்குமாறும் கட்டளையிட்டார். சுவாமி அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்ட மன்னன் கோயில் திருப்பணிகளை ஆரம்பித்தான். ஸ்வாமிகள் மடாலயத்தின் அக்கினிமூலையில் அக்கினி தீர்த்தத்தை உருவாக்கினார். Kinnimangalam temple, Madurai to Kinnimangalam distance, Kinnimangalam Temple contact number, கிண்ணிமங்கலம் ஜீவசமாதி, Kinnimangalam temple history in tamil ஏகநாதர் வரலாறு கிண்ணிமங்கலம் வரலாறு #SriEganatharAnanthaValliAmmanTemple #ArulanandarSwamigalJeevaSamadhi #ArulanandarSwamigal #KinnimangalamArulanandarSwamigalJeevaSamadhi #SriEganathartemple #Kinnimangalamjeevasamathi #Jeevasamathitemple #Kinnimangalamsivankovil #Kinnimangalamsiddhar #KinnimangalmvsKeezhadi #siddharkovil #18siddharkovil #jeevasamadhi #jeevasamadhitemple #81jeevasamadhi #Kinnimangalamjeevasamadhi #Kinnimangalam81jeevasamadhi #Chekkanurani #thirumangalam #mathurakoodal #மதுரகூடல் இது போல இன்னும் பல வீடியோ உங்கள்ளுக்காக, SUBSCRIBE செய்யவும் . Thank u for Watching Madura koodal/மதுரகூடல் please support and subscribe my channel    / மதுரகூடல்  

Comments