Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal) в хорошем качестве

ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal) 5 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal)

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் தாழை, தளவம், முள் தாள் தாமரை ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை பாலை முக்கூட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் இவை போன்று நெய்தல் முக்கூட்டான மலர்கள் - ஞாழலும்(56), தாழையும்(63), புன்னையும் (93) புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் - ஐங்குறுநூறு 103 மன்றப் புன்னை மாச் சினை நறு வீ முன்றில் தாழையொடு கமழும் தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே நற்றிணை 49 தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும், வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல் வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப கலித்தொகை 127 ஞாழல் 'குமரி', 'கன்னி', 'பாவை -என்னும் மூன்று அடை மொழி தழையோர் கொய்குழை அரும்பிய குமரிஞாழல் - நற்றிணை ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து இறையனார் அகப்பொருள் உரை (நக்கீரர்) கன்னி இளஞாழல் கன்னி நறுஞாழல் - சிலம்பதிகாரம் மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும் கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்தும்என் நெஞ்சு திணைமொழி ஐம்பது 49 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு திருக்குறள் ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த் துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப் புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. குறுந்தொகை 50 நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ நெய்தல் மா மலர்ப் பெய்த போல ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, ''அன்னாய்!'' என்னும் குழவி போல, இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், நின் வரைப்பினள் என் தோழி; தன் உறு விழுமம் களைஞரோ இலளே. குறுந்தொகை 397 ''நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் ... நற்றிணை 267 ஞாழற் பத்து ஐங்குறுநூறு எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப் புள்இறை கூரும் துறைவனை உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. ...... எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. ஞாழற் கோயில் பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே. அடைவுத் திருத்தாண்டகம் புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, நிலமலிநெய்த் தானத்தோடு, எத் தானத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டால், தொண்டீர், கலிவலிமிக் கோனைக் கால் விரலால் செற்ற கயிலாய நாதனையே காண லாமே. திருநாவுக்கரசர் கரக்கோயில் என்பது, கடம்பூர்க்கோயில்; கொகுடிக்கோயில் என்பது கருப்பறியலூர்க் கோயில்; இளங்கோயில் திருமீயச்சூரிலும், கீழைக்கடம் பூரிலும் உள்ளதைக் காணலாம். ஞாழற் கோயில் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார். குமிழி ஞாழலார் நப்பசலையார். நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன் அகநானூறு (160) #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #குறிஞ்சிப்பாட்டு #மலர்கள் #பரிபாடல் #ஐங்குறுநூறு #நற்றிணை #அகநானூறு #புறநானூறு #கலித்தொகை #ஞாழல் #கபிலர் #Knowledge #quest #Gnanathedal #Tamil #kurinjipaatu #kabilar #flowers #aganaanooru #purananooru #paripadal #ainkurunooru #kurunthogai #thirugnanasambandar #appar #thirunavukarasar #moodhurai #avvaiyar #nature #trendingvideo #trending For enquiries/feedback: [email protected]

Comments