Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பதஞ்சலி யோக சூத்திரம் - சமாதி பாதம் (வகுப்பு - 1) Patanjali Yoga Sutra's - Samadhi Pada [Class - 1] в хорошем качестве

பதஞ்சலி யோக சூத்திரம் - சமாதி பாதம் (வகுப்பு - 1) Patanjali Yoga Sutra's - Samadhi Pada [Class - 1] 11 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பதஞ்சலி யோக சூத்திரம் - சமாதி பாதம் (வகுப்பு - 1) Patanjali Yoga Sutra's - Samadhi Pada [Class - 1]

MP3 Audio Download Link:- --------------------------------------------- https://paraparam.in/yoga-sutra-samad... ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இந்த யோக சாஸ்திரத்தை சூத்திர வடிவில் கொடுத்துள்ளார். இதில் 196 சூத்திரங்கள் உள்ளன. இவைகள் நான்கு அத்தியாயங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. சூத்திரம் என்பது, விரிவாகச் சொல்ல வேண்டிய உரையை சிலசொற்களில் சுருக்கமாக விளக்குவது எனலாம். அதாவது, ஒரு சில வார்த்தைகளால் செய்யுள் நடையில் இருக்கும். இதனை ‘நூற்பா’ என்றும் அழைக்கலாம். முதல் அத்தியாயம் சமாதி பாதம் என்றும், இரண்டாவது அத்தியாயம் சாதன பாதம், மூன்றாவது அத்தியாயம் விபூதி பாதம், நான்காவது அத்தியாயம் கைவல்ய பாதம் என்பனவாகும். சமாதி பாதம் - Samadhi Pada (Chapter on Enlightenment) அறிவொளி - இதில் 51 சூத்திரங்கள் உள்ளன. சாதன பாதம் - Sadhana Pada (Chapter on Practice) பயிற்சி - இதில் 55 சூத்திரங்கள் உள்ளன. விபூதி பாதம் - Vibhuti Pada (Chapter on Powers or Manifestations) வெளிப்பாடு அல்லது சக்தி - இதில் 56 சூத்திரங்கள் உள்ளன. கைவல்ய பாதம் - Kaivalyam Pada (Chapter on Liberation) விடுதலை - இதில் 34 சூத்திரங்கள் உள்ளன. ஸ்ரீ பதஞ்சலி முனிவர் வாழ்க்கையின் குறிக்கோளாக ‘சித்த விருத்தி நிரோதக யோகக’ என்று குறிப்பிடுகிறார். மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் யோகம், இது தான் லட்சியம் என்று குறிப்பிடுகிறார். மனம் ஒரு கருவி இது பல காரியங்களைச் செய்கிறது. முதலில் ஐம்புலன்களின் பின் நின்று அவைகளின் மூலமாக அறிவைப் பெற கருவியாக அதுவே அமைகிறது. பின் தானாகவே சிந்தித்தும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. தன்னையே சுத்தப்படுத்திக் கொள்ளவும் ஒரு கருவி யாகவும் பயன்படுகிறது. தானே செயலைச் செய்பவனாகவும் (கர்த்தா), அவ்வாறு செய்தவைகளின் மூலம் உண்டாகும் பலன்களை அனுபவிப்பவனுமாக (போக்தா) அனுமானம் செய்து கொள்கின்றது. இப்படிப்பட்ட மனதை அஷ்டாங்க யோகத்தினால் நெறிப்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பதஞ்சலி முனிவர் இந்த நூலில் குறிப்பிடுகின்றார். #PatanjaliYogaSutra, #YogaSutras, #AshtangaYoga, #Patanjali, #RajaYoga, #Meditation, #SelfRealization, #Moksha, #MindControl, #SpiritualAwakening, #YogaPhilosophy, #Consciousness, #InnerPeace, #YogiLifestyle, #Enlightenment PatanjaliYogaSutra, YogaSutras, AshtangaYoga, Patanjali, RajaYoga, Meditation, SelfRealization, Moksha, MindControl, SpiritualAwakening, YogaPhilosophy, Consciousness, InnerPeace, YogiLifestyle, Enlightenment

Comments