У нас вы можете посмотреть бесплатно பகவான் ஸ்ரீராம் சார் பற்றி சிறப்புரை -பிரபல திரை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
விளக்கம்: இந்த அற்புத காணொளி திரு. சுரேஷ் கிருஷ்ணா, சென்னையில் மே 6ம் தேதி, பகவான் ஸ்ரீராம் சார் அவர்கள் வெளியிட்ட 'God Incognito: The Beginning', புத்தகத்தின் 2வது வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம். இப்புத்தகம், திரு. நரேனாதித்யா குமரகிரி அவர்களால், பகவான் ஸ்ரீராம் சார் அவர்களின் தெய்வீக வாழ்க்கையை பற்றி கூறுகிறது; இப்புத்தகம் வாசகர்களின் தெய்வீக உணர்வுகளை தூண்டி விடுவதாக அமைந்துள்ளது.; Amazon Indiaவில், 100% 5-நக்ஷத்திர மதிப்பீடு வாங்கிய ஒரு அற்புதமான புத்தகம் இது. ஒரு 22 வருடத்திற்கு முன் ஹைதராபாதில் என் நண்பர் ஒருவர் மூலம் ஒருவரால் ஸ்ரீராம் சாருக்கு அறிமுகமானேன். அவர் ஸ்ரீராம் சாரை, மகான் என்றும், கடவுள் என்றும் கூறி, அவரை நான் சந்திக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். நம்மை சுற்றி மகான் என்ற பெயரில் பலர் ஏமாற்றுவதை பார்த்திருப்பதால் என் மனதில் சந்தேகத்துடனேயே நான் இருந்தேன். இதை உணர்ந்த ஸ்ரீராம் சார் என்னிடம் முதல் கேள்வியாக கடவுளை பற்றி படித்திருக்கிறீர்களா என்றார். ஆம் என்றேன். Biography, Autobiography என்றால் தெரியுமா என்றார். சரியாக விடை அளித்த பின் Autobiography of God படித்திருக்கிறீர்களா என்றார். இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள், வாங்கி படிக்கிறேன் என்றேன். அவர் பதிலில் மயங்கினேன். “ஒரு சிறு விதை விதைக்கிறீர்கள். நீங்கள் அதற்கு தண்ணீர் மட்டுமே விடுகிறீர்கள். சிறிது நாட்களில் அது ஒரு செடியாக வளர்ந்து, பூப்பூத்து, நறுமணத்துடன் வேறு இருக்கிறது. அதை பாதுகாக்க செடியில் முள். எப்படி? நீங்கள் ஏதாவது செய்தீர்களா? இல்லையே. ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் கருவிற்கு தானே கண், மூக்கு, கால், தசைகள் எல்லாம் வளர்கின்றன. வெளியில் வந்தவுடன், அக்குழந்தை தானே தவழவும், உட்காரவும், நடக்கவும் கற்றுக்கொள்கிறது. இதை யாராவது கற்றுக்கொடுத்தார்களா? இல்லையே. ஒரு உப்பு தண்ணீராக இருக்கும் கடற்கரை அருகில் தான் தென்னை மரம் இருக்கும். அதில் உள்ள தேங்காய் வெளியில் தடிமனாக மூடப்பட்டிருக்கும். உள்ளே சிறிய ஓடு போன்று இருக்கும், அதற்குள் இனிப்பான தண்ணீர் இருக்கும். ஒரு உப்பு கலந்த கடற்கரை அருகில் இது எப்படி வளர்ந்தது? தாகம் எடுப்பவனுக்கு சுலபமாக அங்கு நல்ல தண்ணீர் கிடைத்தது எப்படி... சூரியன் என்றைக்காவது உதயத்திற்கு நேரம் தவறியதுண்டா? இது எப்படி சாத்தியம். இவை எல்லாம் தான் Autobiography of God”. இப்படி ஒரு 15 நிமிடத்திற்கு இடைவிடாமல் சொல்லிக்கொண்டே போனார். நான் அசந்தே போனேன். இவர் கூறிய அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அனால் அதில் கவனம் செலுத்தியதில்லை. வழக்கமான வேலைகளிலும், தொழிலிலும், கவனம் செலுத்தி இருந்துவிட்டேன். எல்லாம் நன்றாக நடந்தால் கடவுள் கூட இருக்கிறான், நடக்க வில்லை என்றால் எங்கே அந்த கடவுள், இப்படியே நமக்குள் சந்தேகங்கள் சூழ்ந்து, பிறகு ஜாதகம் பார்ப்பது, பரிகாரம் செய்வது இப்படியே போகிறோம். இந்த 22 வருஷத்தில், அவர் என்னுடன் வெளிநாடுகள், ஷூட்டிங் வந்திருக்கிறார். அங்கெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு விஷயம் சொல்லிக்கொண்டே வருவார். எவ்வளவு விஷயம் சொல்லி கொடுத்திருக்கிறார்..எத்தனை அற்புதங்கள் செய்திருக்கிறார்! அது அப்போதைக்கு நன்றாக இருக்கும். பிறகு மற்ற வேலைகளில் மூழ்கிவிட்டால் அதை பற்றி யோசிப்பதில்லை. என் வாழ்க்கையில் சார் செய்த பல அற்புதங்களை பார்த்திருக்கிறேன். ஒரு தடவை ஒரு சிறிய கவர் கொடுத்து, இதை எப்போது பிரிக்கிறாயோ என்னிடம் சொல் என்றார். என்னிடம் ஒரு 15 நாட்கள் வைத்திருந்து பிறகு அதை பிரிக்க இடம், நேரம் எல்லாம் நான் முடிவு செய்து, அந்தக் கவரை பிரித்தேன். அதில் ஏற்கனவே எழுதி இருக்கிறது, இந்த இடத்தில், இந்த தேதியில், இத்தனை மணிக்கு இதைப் பிரிப்பேன் என்று. அந்த 15 நாட்கள் நான் அந்த கவரை வைத்திருந்த போது நடந்த முக்கிய சம்பவங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் குறிப்பிடப்பட்டிருந்தன. அப்படியென்றால் நடக்க போவது அனைத்தும் அவருக்குத் தெரியும். அனால் இன்று வரையில் என்னிடம் நீ இதை செய், செய்யாதே, உனக்கு இது வேண்டாம் என்று எதுவும் கூறியதில்லை. இப்படி எல்லாம் கூறி தற்காலிகமாக உங்களை காப்பாற்ற மாட்டார். ஏனெனில், வாழ்க்கை அந்த நொடியுடன் முடிவடைவதில்லை, திரும்ப திரும்ப வாழ்க்கை பல கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும் இல்லையா. அதனால், இவர் எதிர்காலத்தை கணிக்க மாட்டார். அவர் ஒரு சர்ஜன். உங்கள் பிரச்னையை அடி வேரிலிருந்து அகற்றி விடுவார். 14 வருடத்திற்குப் பிறகு தான், நமக்கு அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்பதை உணர ஆரம்பித்தேன். நாம் அதை கடை பிடித்தால் கண்டிப்பாக பலன் உண்டு என்று தோன்றியது. அப்போது சாருடன் பேசியது எல்லாம் ஒரு புத்தகமாக எழுதும் பொழுது சார் சொல்லிக் கொடுத்த அனைத்தும் நினைத்து நினைத்து அதன் படி நடக்க முனைந்து ஒரு .01% வளர்ந்தேன். அதிலிருந்து அடுத்த 10 வருடங்கள் எனக்கு மிகவும் கடினமான கால கட்டம். முதல் 10 வருடங்கள் எதைக் கற்றேனோ, அடுத்த 10 வருடங்கள் செயல்படுத்தத் தொடங்கினேன். அவர் கூறியதை நாம் பின்பற்றும் போது நமக்கு விடைகள் கிடைக்கும். மனதில் அமைதி நிலவும், தெளிவு பிறக்கும். அதை புரிந்து வாழ்கிறேன். அவர் கூறிய பாடங்களை செயல் முறை படுத்தப் படுத்த, நமக்கு வழிகாட்டியாக இருந்து காப்பாற்றுகிறார். அவரை பற்றியும், எனக்கு அவருடன் இருந்த அனுபவங்களையும் கூற ஒரு நாள் போதாது. அதை பற்றி பேசினாலே, கண்களில் நீர் சுரக்கும். அவ்வளவு இனிமையான தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். சார் தன்னை விளம்பர படுத்திக் கொள்ள விரும்பாதவர். அறியா நபராக இருப்பதையே விரும்புபவர். அவர் அந்த புத்தகத்தில் சொல்லி இருப்பதை வெறும் கதை போல் படிக்காமல் உள்வாங்கி படித்து அதை பின்பற்றுங்கள். அவர் எப்பொழுதும் உங்களுடன் இருந்து உங்கள் கைகளை பிடித்து கூட்டிக் கொண்டு போய்விடுவார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கும். மிக்க நன்றி.