Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 9 செவ்வாய் கிழமைகள் தோறும் கூறும் அந்தோணியார் ஜெபம் 🙏 அற்புதம் நடந்தே தீரும் в хорошем качестве

9 செவ்வாய் கிழமைகள் தோறும் கூறும் அந்தோணியார் ஜெபம் 🙏 அற்புதம் நடந்தே தீரும் 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



9 செவ்வாய் கிழமைகள் தோறும் கூறும் அந்தோணியார் ஜெபம் 🙏 அற்புதம் நடந்தே தீரும்

செவ்வாய்க்கிழமைதோறும் சொல்லும் மூன்று மன்றாட்டுக்கள் முதல் மன்றாட்டு பதுவைப்பதியரான புனித அந்தோனியா ரே , பரிசுத்த தனம் விளங்கும்லீலியே, விலை மதிக்கப்படாத மாணிக்கமே / திருச்சபையில் துலங்கும் நட்சத்திரமே வாழ்க! மகா பேறு பெற்ற புனித அந்தோனியாரே! பரலோக வாசிகளால் தெளிந்த மெய்ஞான ஞானாதித்தரே! தெய்வ நேச அக்கினியால் சுடர் விட்டு எரிகிற மெய்ஞான பக்தி சுவாலகரே! என் முழு இருதயத்தோடு உம்மை ஸ்துதித்து வாழ்த்துகிறேன். சர்வேசுரன் உமக்கு ஏராளமாய்ப் பொழிந்த சகல உபகார சகாயங்களுக்காக உம்மை ஸ்துதிக்கிறேன். ஆl. என் நேச புனித அந்தோனியாரே! உமக்கு என் தோத்திரங்களை ஒப்புக் கொடுக்கிறதற்காக உமது திருச்சுரூபத்திற்கு முன்பாக தாழ்ச்சி விநயத்துடன் முழந்தாளிட்டு நிற்கிறேன். சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமான சினேகிதரே! நீர் செய்திருக்கிற வாக்குத்தத்தை நினைத்தருளும் . அடுத்தடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது சுரூபத்தைச் சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது தயையின் சக்தியைக் காண்பித்தருளுவீரென்று நீர் எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறீரே! நீர் இதுவரையிலும் உமது வாக்குத்தத்தத்தைப் பிரமாணிக்கமாய் காப்பாற்றி வருகிறீர் .தகுந்தபடி உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லாரும் வல்லபமுள்ள உமது சிபாரிசைத் தடுக்க பெருத்த விக்கினங்கள் இல்லாத போதெல்லாம் தாங்கள் கேட்ட உபகாரத்தை அடைந்தார்களே! ஆகையால் நானும் என் இருதயத்தை உமக்குத் திறந்து காட்டவும் என் அவசரங்களை உம்மிடத்தில் முழு நம்பிக்கையுடன் சொல்லிக் காட்டவும் இந்த ஆலயத்தில் வந்திருக்கிறேன் . உமது சுரூபத்தை உற்றுப் பார்க்கும் போது எனக்குக் கண்ணீர் ததும்புகின்றது. ஆயினும் என் ஆத்துமம் பரலோகம் நோக்கித் தாவுகின்றது . இத்தருணத்தில் உமது மட்டில் எனக்கு உண்டாயிருக்கிற நேச பாசத்துக்கு சரி யொத்த ஆசை அன்போடென் கிலும் மாட்சிமை தாங்கிய அம் மேலான வாசஸ்தலத்தினின்று நீர் என் பேரில் கிருபா நோக்கம் பாலித்தருளும் . உமது கரத்தில் ஏந்திய திருக் குழந்தை இயேசுவின் மட்டில் உமக்கு உண்டாயிருக்கிற நேசத்தைப் பார்த்து நான் கெஞ்சிக் கேட்பது ஏதெனில் என் அவசரங்கள் எல்லாம் அத்திருப்பாலனுக்குச் சொல்லிக் காட்டி அவரிடத்தில் எனக்காக மனுப் பேச வேண்டும் என்பதாம். என் ஆசைக்குரிய புனித அந்தோனியாரே / எனக்கு உதவி செய்கிறது உமக்கு எவ்வளவோ எளிதாயிருக்கிறது . என் மன்றாட்டைத் தந்தருளுவதற்காக நீர் சர்வேசுரனிடத்தில் வாய் திறந்து பேசுவது ஒன்றே போதுமானது. உள்ளபடியே உமது கரங்களில் நீர் அன்போடு அரவணைத்த திருக் குழந்தை இயேசு உமது விண்ணப்பங்களைத் தள்ளிப் போடப் போகிறதே இல்லை . நீர் இவ்வுலகில் சஞ்சரித்த காலத்தில் அவருக்கு உமது மட்டில் உண்டான நேசத்தால் பல தடவை அவர் உமக்கு தரிசனையானாரே / அவரைத் தொடவும் முத்தமிடவும் தழுவவும் சித்தமானீரே! மோட்சத்தில் அவரோடு அரசாண்டு வரும் இத்தினத்தில் உம்மை நேசிக்கவும், உம்மை மகிமைப்படுத்தவும் நீர் சொல்வதைக் கேட்கவும் அவர் ஆயிரம் மடங்கு ஆசையுள்ளவராய் இருக்க மாட்டாரோ ? பூவுலகில் உமது திருக்கரங்களுக்கும் , நேசத்துக்குரிய உமது இருதயத்திற்கும் ஒப்புவிக்கப்பட்ட திவ்விய பாலனாகிய இயேசு , பரலோகத்திலும் இந்த இணை பிரியாத பட்சத்தைப் பாராட்டி வருகிறாரென்று உலகம் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. இதைப் பற்றியல்லோ மதுர குணமுள்ள நமது இரட்சகர் உமது சுரூபம் சௌந்தரியம் நிறைந்த குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தின வண்ணமாய் எழுதப்படவும் சித்தரிக்கப்படவும் சித்தமானார் இயேசுவே ! புனித அந்தோனியாரே! என்றும் இணை பிரியாத நேசர்களே வாழ்க ! இயேசுவே ! புனித அந்தோனியாரே ! அன்னியோன்னிய நேசபந்தனமான இருதயங்களே! அடியேன் மட்டில் இரக்கம் புரிந்து பக்தி நேசத்தால் என் இருதயத்தை எரியச் செய்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் .இயேசுவே! உமது நேச அந்தோனியார் பேராலல்லோ நான் உம்மை மன்றாடுகின்றேன் .அந்தோனியாரே ! உமது நேச இயேசுவின் பெயராலே நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் . இயேசுவே ! புனித அந்தோனியாரே ! பூலோகத்தில் உங்களை ஐக்கியப்படுத்தினதும் பரலோகத்தில் இப்பொழுது உங்களை ஐக்கியப்படுத்துகிறதுமான உருக்க நேசத்தையும், அன்னியோன்னிய பட்சத்தையும் பார்த்து உங்களுக்கு அதிக பிரமாணிக்கமுள்ள சிநேகிதர்களில் அடியேனையும் ஒருவனாக ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறேன். ஒ இயேசுவே ! புனித அந்தோனியாரே ! என் இருதயத்தை உங்கள் பாதுகாவலில் வைக்கிறேன். ஓ இயேசுவே! புனித அந்தோனியாரே ! உங்கள் கரங்களில் என் சகல கிலேசங்களையும் எனது ஏக்க கலக்கங்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். இவ்வுலகில் உங்கள் பரிசுத்த சுரூபங்களை மேரை மரியாதையோடும் , பக்தி வினயத்தோடும் நோக்கிப் பார்த்து வருகிற அடியேனுக்கு பரலோகத்தில் நித்தியத்திற்கும் உங்களை முகமுகமாய்த் தரிசிக்கிற மேலான பாக்கியத்தைத் தந்தருளுங்கள் ஆமென்

Comments