Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு в хорошем качестве

உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் உடுப்பி நகரம் ஓர் அற்புதமான #சுற்றுலா தலமாகும். ஆன்மிகம், சாகசம், இயற்கை அழகு என்ற எல்லா வகை சுற்றுலாக்களையும் ஒருங்கே கொண்ட நகரம். மங்களூர் மாநகரில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் இந்த நகரம் உள்ளது. சுவையான சைவ உணவுக்கு பெயர் பெற்ற ஆன்மிக நகரம் இது. சுற்றுலாவில் தனி இடம் பிடித்திருக்கும் உடுப்பி பற்றி தொடர்ந்து ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம். இதன் முதல் பகுதியாக உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்குப் போகப்போகிறோம். இந்தக் கோயில் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிமீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மிக சுத்தமாக பராமரிக்கப்படும் ஓர் அற்புத கோயில் இதுவென்று சொல்லலாம். கோயில் வளாகத்தில் குப்பை என்ற ஒன்றை எங்கும் பார்க்கமுடியவில்லை. அதுவே மனநிறைவை தருகிறது. தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக உடுப்பி கிருஷ்னர் கோயில் இருக்கிறது. இந்த ஊருக்கு உடுப்பி என்று பெயர் வரக்காரணம் இந்தக் கோயில்தான். நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக தனது மனைவிகளான 27 நட்சத்திரங்களுடன் வந்து கிருஷ்ணரை வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்றார். அதனால் இந்த ஊருக்கு உடுப்பி என்று பெயர் வந்தது. 'உடு' என்றால் நட்சத்திரம், 'பா' என்றால் தலைவன். நட்சத்திரங்களின் தலைவன் என்பதை 'உடுபா' என்றழைத்தனர். நாளடைவில் 'உடுபா' என்பது 'உடுப்பி'யாக மாறியது. சந்திரன் வழிபட்ட கிருஷணரை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வருகிறார்கள். ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு வர 50 ரூபாய் கட்டணமாக கேட்கிறார்கள். பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு செல்ல 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். காலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை தொடர்ந்து கோயில் திறந்திருக்கும். நடை சாத்துவது கிடையாது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு பல ஆயிரம் ஆண்டு கால சரித்திரம் இருக்கிறது. உடுப்பியில் இருக்கும் கிருஷ்ணரை ருக்மணி தேவி பூஜித்திருக்கிறார். கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி தேவி துவாரகை நகரில் வாழ்ந்தபோது, அவருக்கு ஒரு வினோதமான ஆசை ஏற்பட்டது. அது கிருஷ்ண பகவான் குழந்தையாக இருக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்பதுதான். அதன்பின் நடந்தவைகளையும் உடுப்பிக்கு எப்படி போகலாம்? அங்கு என்னென்ன பார்க்கலாம் என்பதை விரிவாக சொல்கிறது இந்தக் காணொளி. #TravelsNext #tourism #touristplace #touristspot #udupikrishna இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம். https://www.thagaval360d.com Music: www.bensound.com ----------------------------------------------------------------- Subscribe and hit the bell to see a new video Subscribe here ► https://goo.gl/PWixWj ► SPS MEDIA: https://goo.gl/QNBEHC ► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo Facebook :   / travels-next-188384645139780   Twitter :   / senthilmsp   -------------------------------------------------------------------

Comments