Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 1000+ ஆண்டு கடந்து நிற்கும் சோழர்களின் அதிசய வரலாறு | சிறப்பு காணொளி உங்களுக்காக | Cauvery Karai в хорошем качестве

1000+ ஆண்டு கடந்து நிற்கும் சோழர்களின் அதிசய வரலாறு | சிறப்பு காணொளி உங்களுக்காக | Cauvery Karai 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



1000+ ஆண்டு கடந்து நிற்கும் சோழர்களின் அதிசய வரலாறு | சிறப்பு காணொளி உங்களுக்காக | Cauvery Karai

Subscribe    / @cauvery_karai   #thanjavur #CauveryKarai #ThanjaiPeriyaKovil தமிழ்நாட்டில் பெரிய கோயில் எது என சாதாரணமாகக் கேட்டாலே, உடனடியாக யாரும் சொல்லக்கூடிய பதில், தஞ்சைப் பெரிய கோயிலாகத்தான் இருக்கும். உண்மையில் இதுதான் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கோயிலா என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. ஏதாவது ஒரு வகையில் காரணப் பெயராக இருக்கும் என நீங்கள் நினைத்தால், அது முழுக்க முழுக்க சரிதான்! தென்னிந்தியக் கோயில்களிலேயே உயரமான விமானத்தைக் கொண்டதாக இருப்பதால்தான், பெரிய கோயில் எனப் பெயர் பெற்றது என தொல்லியலாளர்களும் வரலாற்றியலாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர். கடந்த நூற்றாண்டுவரை, இந்தக் கோயிலைக் கட்டியது யார், எந்தக் காலகட்டத்தில் என்னென்ன கட்டுமானங்கள் கட்டப்பட்டன என்கிற வரலாறு பற்றி, திட்டவட்டமான தகவல்கள் இல்லாதநிலைதான் நிலவியது. இந்தக் கோயில்களைப் பற்றி விதவிதமான கதைகள் கூறப்பட்டு வந்தன. அவற்றுள் பலவும் கற்பனையானவை என தொல்லியல் அறிஞர்கள் நிராகரித்து ஒதுக்கினார்கள். குறிப்பாக, கோயிலின் விமானத்துக்காக 80 டன் எடை கொண்ட ஒரே கல்லை, தஞ்சையிலிருந்து வடகிழக்கே 4 மைல் தொலைவில் வயலூரிலிருந்து, சாரம் கட்டி எடுத்துவரப்பட்டதாக, இன்றும் கூறப்பட்டுவருகிறது. இதன் காரணமாகவே அந்த ஊரின் பெயர் சாரப்பள்ளம் என மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மை அல்ல என்கிறார், தஞ்சை தொல்லியலாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம். பிரதீசுவர மகாத்மியம் எனும் வடமொழிப் புராணமும், தஞ்சைபுரி மகாத்மியம் எனும் மராட்டிய நூலும் கூறுவதன்படி, கிருமிகண்ட சோழன் எனும் கரிகாலனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது; இங்குள்ள சிவகங்கை எனும் நீர்நிலையில் குளித்ததால்தான் அவனுக்கிருந்த தொழு நோய் விடுபட்டது என்பது ஒரு கதை. காடுவெட்டிச் சோழன் என்பவரே பெரியகோயிலைக் கட்டியதாகக் குறிப்பிட்டார், ஜி.யு.போப். இப்படியான கருத்துகள் நிலவிவந்த காலத்தில், 1886ஆம் ஆண்டில், இதுகுறித்து ஆய்வுசெய்ய, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹீல்ஸ் என்ற கல்வெட்டியலாளரை பிரிட்டன் அரசாங்கம் நியமித்தது. பெரிய கோயில் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை ஆய்வுசெய்து, பெரிய கோயிலைக் கட்டியெழுப்பச் செய்தவன் ராஜராஜனே என்று திட்டவட்டமாகக் கூறினார். அதையடுத்து, 1892இல் வெளியிடப்பட்ட தென்னிந்தியக் கல்வெட்டுகள் எனும் நூலில் இடம்பெற்ற முதல் கல்வெட்டு, இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இராஜராஜன் மட்டுமல்ல, சோழ நாட்டின் தலைமைக் கட்டடக் கலைஞர் வீரசோழன் குஞ்சரமல்லன், அவரையடுத்த நிலைக் கட்டடக் கலைஞர் மதுராந்தகன், இலத்தி சடையன் கண்டராதித்தப் பெருந்தச்சன், ராஜராஜனின் தங்கை குந்தவை, சேனாபதி கிருஷ்ணன் ராமன், கோயிலின் நிர்வாக அதிகாரி பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன், சிவபண்டிதர் எனும் ராஜகுரு, இராஜேந்திர சோழன், அவனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர், தலைமைக் குருக்கள் பவனபிடாரன் ஆகியோரும், பெரிய கோயில் உருவாக்கத்தில் முக்கியமானவர்கள். இவர்கள் இன்றி, இந்தக் கோயில் இல்லை என்றும் கூறமுடியும் என்கிறார்கள், ஆய்வாளர்கள். அதாவது, ராஜராஜன் நினைத்ததை இவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, பெரிய கோயிலை உருவாக்கப் பணியாற்ரிய படைவீரர்கள், ஊர்ச்சபைகள், தனிநபர்கள் என அனைவரின் பெயர்களையும், கோயிலின் கல்லில் பொறிக்கச் செய்திருக்கிறான், ராஜராஜன். இந்தக் கோயில் சமயத்தையும் கலைகளையும் காட்டக்கூடியது மட்டும் அல்ல, வரலாற்றையும் கூறும் காலப் பெட்டகமும் ஆகும். தஞ்சையில் எழுப்பப்பட்ட இந்தக் கோயிலுக்கு, கொல்லிமலையிலிருந்தும் நர்மதை ஆற்றங்கரையிலிருந்தும் கற்களைக் கொண்டுவந்ததாகக் கூறப்படுவதும் உண்டு. ஆனால், தஞ்சைக்குத் தென்மேற்கில், புதுக்கோட்டை மாவட்டத்தில், குன்னாண்டார் கோயில் பகுதியிலிருந்தே கருங்கற்களைக் கொண்டுவந்திருக்க முடியும் எனும் கருத்தே, பரவலாக ஏற்கப்படுவதாக இருக்கிறது. முக்கிய காரணம், தஞ்சைக்குத் தெற்கிலும் தென்மேற்கிலும் தவிர்த்து, மற்ற அனைத்து திசைகளிலும் ஆறுகளும் வாய்க்கால்களுமே சூழ்ந்துள்ளன. அவற்றின் வழியாக கனமான பெரும் கற்பாறைகளைக் கொண்டுவருவது, மிகமிகக் கடினமாகும். ஆனால் தஞ்சையைவிட சற்று உயரமான தென்மேற்குத் திசைப்பகுதி, கற்களைக் கொண்டுவர ஏற்றது. மேலும், தஞ்சைக்கு அருகில் கோயிலுக்கான கற்கள் கிடைக்கக்கூடிய பகுதியாகவும் இதுவே இருந்திருக்கிறது.

Comments