Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 04.094 திருப்பாதிரிப்புலியூர் | புழுவாய்ப் பிறக்கினும் | அப்பர் தேவாரம் | в хорошем качестве

04.094 திருப்பாதிரிப்புலியூர் | புழுவாய்ப் பிறக்கினும் | அப்பர் தேவாரம் | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



04.094 திருப்பாதிரிப்புலியூர் | புழுவாய்ப் பிறக்கினும் | அப்பர் தேவாரம் |

04.094 திருப்பாதிரிப்புலியூர் | புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி | திருநாவுக்கரசர் தேவாரம் புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ தோன்றாத்துணை நாதர், ஸ்ரீ பாடலீஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரியநாயகி அம்மை, ஸ்ரீ கோதை நாயகி திருமுறை : நான்காம் திருமுறை பதிகம் எண் : 094 பாடல் எண் : 08 அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார் திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. கரையேறிய அப்பர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்" எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் இறைவனைத் தொழுதார். அப்பதிகத்தில் "தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே" என்று குறிப்பிடுவதால் இத்தல இறைவன் "தோன்றாத்துணை நாதர்" என்னும் பெயரும் பெற்றார். "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இவ்வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே." பொருளுரை : இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற, திருப்பாதிரிப்புலியூரில் உறையும், செழுமையான கங்கை நீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும். ஆலய முகவரி : அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவில், திருப்பாதிரிபுலியூர் அஞ்சல், கடலூர், கடலூர் மாவட்டம், PIN - 607 002. எப்படிப் போவது : திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு. "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Comments