Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб na muthukumar kavithaigal | நா. முத்துக்குமார் கவிதைகள் в хорошем качестве

na muthukumar kavithaigal | நா. முத்துக்குமார் கவிதைகள் 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



na muthukumar kavithaigal | நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். கல்வி காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரைப் படித்துத் தேறினார். பின்னர் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இயல்பியல் பயின்று 88% மதிப்பெண் பெற்று அறிவியல் இளவர் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இவர் எழுதிய தூர் என்ற கவிதையே முதுகலையில் இவருக்குப் பாடமாக இருந்தது. பின்னர் "தமிழ்த் திரைப்படப் பாடல்கள் 1990 முதல் 2000 வரை" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார். பணி தொடக்கத்தில் திரைப்பட இயக்குநராக சென்னை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் இணைய விண்ணப்பத்தார். ஆனால், இடங்கிடைக்கவில்லை. எனவே, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணிசெய்தார். இயக்குநர் சீமானின் வீரநடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007),வாரணம் ஆயிரம் (2008) ஆகியன போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் [7], 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார். இவர் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியில் தீபலட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். மறைவு 2016 ஆகத்து 14 அன்று காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.

Comments