Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் | Pure Tamil boy baby names | Aan kuzhanthai peyargal в хорошем качестве

ஆண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் | Pure Tamil boy baby names | Aan kuzhanthai peyargal 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் | Pure Tamil boy baby names | Aan kuzhanthai peyargal

அகரன் - முதலானவன் அறிவன் - நல்லறிவுடையவன் அவிரன் - ஒளிபொருந்தியவன் அதிகன் - மேலானவன்(சங்ககாலக் குறுநில மன்னன்) அன்பன் - அன்பானவன் அகவழகன் - அழகிய மனம் படைத்தவன் அணியன் - நெருங்கியவன் அதிரன் - அதிர்வை உண்டாக்குபவன் அருளன் - அருள்பவன் அணன் - பொருந்தியவன் அருள்மொழி - கருணையுடன் மொழிபவன்(இராஜ ராஐ சோழன் பெயர்) அறிவொளி - அறிவெனும் ஒளியுடையவன் அகமகிழன் - மனமகிழ்ந்திருப்பவன் அடியார்க்கினியன் - அடியவர்களுக்கு இனியவன்(சிவன் பெயர்) அகிலன் - அகில் - மணமுடைய ஒரு மரம்/அகிலத்தை ஆள்பவன் ஆதன் - உயிர்வளி போன்றவன் ஆதிரையான் - திருவாதிரையில் பிறந்தவன்(சிவன் பெயர்) ஆரூரன் - திருவாரூரில் வாழ்பவன் (சிவன் பெயர்) ஆகேறன் - கொன்றை வேந்தன் (ஆகேறு - கொன்றை மலர்) ஆடலன் - ஆடல் வல்லான் (சிவன் பெயர்) ஆராவமுதன் - தீராத அமுதன் இமயவரம்பன் - இமயம்வரை படையெடுத்து வென்றவன் இலக்கியன் - இலக்கியம் படைப்பவன் இளம்பரிதி - இளம் கதிரவன் இனியன் - இனிமையானவன் இன்மொழி - இனிமையாகப் பேசுபவன் இளவழகன் - இளமையான அழகுடையவன் உதிரன் - உயிர்ப்புள்ளவன் எழிலன் - அழகன் ஏழிசையோன் - ஏழிசைக்கு அரசன் கவிநயன் - கவிதை அழகு உடையவன் கதிரன் - கதிர் போன்றவன் கயலன் - கடலரசன் கணியன் - கணிப்பதில் வல்லவன் கனியமுதன் - கனி போன்றி இனியவன் கன்னல் மொழியன் - கரும்பு போன்ற இனிய மொழியோன். கடலோன் - கடலரசன் காவியன் - காவியம் படைப்பவன் கார்முகிலன் - மழைதரும் மேகம் போன்றவன் குவிரன் - காடு ஆள்வோன் கொற்றவன் - மன்னன் கோவிலோன் - தலைவன் சிவகுகன் - முருகன் பெயர் சீரன் - சீர்மை மிகுந்தவன் சித்திரன் - ஓவியம் போன்றவன் சுடரோன் - ஒளிமிகுந்த சுடர் போன்றவன் செம்பியன் - தங்கத் தலைவன்(சங்க கால அரசன்) செந்தமிழன் - செம்மை மிகு தமிழன் சேந்தன் - நண்பன் சேரலாதன் - சேரமன்னன் சொற்கோ - சொல்லுக்கரசன் தமிழ்மகன் - தமிழன்னையின் மகன் தழலன் - நெருப்பு போன்றவன் தவன் - தவத்தில் சிறந்தவன் தண்ணிலவன் - குளிர் நிலவு போன்றவன் தாரகன் - ஆதாரமானவன் தாமிரன் - ஒளிமிகுந்தவன் திரையன் - தொண்டைநாட்டு மன்னன் திகட்டா இன்பன் - திகட்டாத இன்பம் கொடுப்பவன் திசன் - திசைகளை ஆள்வோன்(கீழடியில் கிடைத்த பெயர்) தீர்வன் - தீர்வளிப்பவன் தீரன் - வீரன் துயிலன் - பாற்கடலில் துயில்பவன்(திருமால்) துகிலன - நேர்த்தியாய் உடுத்துபவன் தூயவன் - தூய்மையானவன் தெளிவன் - தெளிந்த அறிவுடையவன் தென்னன் - பாண்டியன் தெள்ளறிவன் - தெளிந்த அறிவுடையவன் தொல்காப்பியன் - தொன்மைமிகு காப்பியம் படைத்தவன் நல்லன் - நல்லவன் நவிலன் - இனிமையாய்ப் பேசுபவன்; கல்வியாளன் நள்ளன் - நண்பன்; நடுவிலிருப்பவன் நாவினியன் - இனிமையாய்ப் பேசுபவன் நிமலன் - சிவன் நிலன் - பரந்த நிலத்தின் தலைவன் நிலவன் - நிலவைப் போன்றவன் நித்திலன் - முத்துப் போன்றவன் நீரன் - ஒழுக்கமுடையவன் நெடுமாறன் - பாண்டிய மன்னன் நேயன் - அன்பானவன் பரிதி - சூரியன் போன்றவன் பகலவன் - சூரியன் போன்றவன் பண்பன் - பண்பானவன் பாவலன் - பாடல் இயற்றுபவன் பிறைநிலவன் - பிறை நிலவைச் சூடியவன்(சிவன்) பொன்னார்மேனியன் - மின்னும் மேனி உடையவன்(சிவன்) போகன் - இன்பங்களை துய்ப்பவன்;சிவன் மயிலோன் - முருகன் மகிழ்நன் - மருதநிலத் தலைவன் மரகதன் - மரகதம்(நவரத்தினங்களுள் ஒன்று) மதியழகன் - நிலவு போன்ற அழகுடையவன்; அழகிய அறிவுடையவன் மாசிலன் - தூயவன் மாறன் - பாண்டிய மன்னன் மணிமாறன் - பாண்டியன்; ஐயப்பன் மெய்யன் - உண்மையானவன் மேழிநம்பி - மருதநிலத் தலைவன் மருதன் - மருதநிலத் தலைவன் மிளிரன் - மிளிர்பவன் மித்திரன் - நண்பன் முகிலின்பன் - மழைமேகம் போல் இன்பம் தருபவன் மிகன் - பெருமை மிக்கவன் மேகோன் - சிறந்த தலைவன் யாழன் - யாழ் - இசைக்கருவி யாழின்பன் - யாழிசைபோன்று இனிமையானவன் வளன் - வளமானவன் வளவன் - சோழன் வானன் - வானத்திலுள்ளவன்; சிவன் வியன் - பெருமை மிக்கவன் விண்கோ - விண்ணுக்கு அரசன் வேழன் - யானைபோன்று வலிமைமிக்கவன் விமலன் - சிவன் வேந்தன் - மருத நிலக் கடவுள்; அரசன் வினயன் - செயல்திறன் மிக்கவன்

Comments