Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб செடியேன் தீவினையில் | தேவாரம் - 15 | Sediyen Theevinaiyir | சுந்தரர் | Thevaram | Sundarar в хорошем качестве

செடியேன் தீவினையில் | தேவாரம் - 15 | Sediyen Theevinaiyir | சுந்தரர் | Thevaram | Sundarar 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



செடியேன் தீவினையில் | தேவாரம் - 15 | Sediyen Theevinaiyir | சுந்தரர் | Thevaram | Sundarar

A Humble Offering by Keerthana Vengatesan. This is really a very Rare Collection of Sundarar Thevaram. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love Meaning of the Song: 1. பொ-ரை: திருமுடியின் மேல், பெருமை பொருந்திய பிறையும், பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர், குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும், 'அந்தோ! இவன் நம் அடியவன்!' என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக்கழிப்பாலையில், வாளா இருத்தல் தகுதியாகுமோ! 2. பொ-ரை: திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன். 3. பொ-ரை: குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய்; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும், நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டுகண்டத்தில் நிறுத்தினாய்; அதனால், அவ்விடம் கரிதாயினாய்; இவை உன் அருட்செயல்கள். 4. பொ-ரை: கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, வண்டுகள் ஒலிக்கின்ற, அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி, பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன்; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன்; இஃது என் உணர்விருந்தவாறு. 5. பொ-ரை: நீர்ச் சுழிகளை, அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே, நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின். என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய்; பின் அது காரணமாக, என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய்; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய்; பின் அது காரணமாக, என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய்; உன்னை 'இவ்வாறு செய்க' எனக் கட்டளையிடுவார் யார்? 6. பொ-ரை: அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல், ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே, யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே,உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே, உனக்கு இடமாவது, புகழையுடைய திருக்கழிப்பாலையே. 7. பொ-ரை: உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே, தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே. குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளியிருப்பவனே, நீ முன்பு யானையின் தோலைப் போர்வையாக விரும்பி, பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய்; முப்புரங்களையும் எரித்தாய்; இவை உனது வீரச் செயல்கள். 8. பொ-ரை: விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, கடலைச் சார்ந்த, கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, நீ, உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்; தக்கனது வேள்வியை அழித்தாய்; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய்; இவை உன் வல்லமைகள்! 9. பொ-ரை: பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக்கழிப்பாலையையே விரும்பி, மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான். 10. பொ-ரை: பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும், யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை, அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள், தேவர் உலகத்தை ஆள்பவராவர். #thevaram #sundarar #sediyentheevinaiyil If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram:   / __keerthana_vengatesan   Follow us on Facebook Page:   / keerthanavengatesan1  

Comments