У нас вы можете посмотреть бесплатно இஸ்லாமிய சூபிகள் பக்கீர்ஷாக்களின் அறியப்படாத வரலாறு| நாவலாசிரியர் முத்துநாகு| History of Sufis| или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#sufi #thandoratamilan #islam #fakeer #fakir #fakirsha #sufisongs #thandoratamilanislam #tamilspeech #rmuthunagu #muthunagu #islamicvideos #muslimvideos #bayan அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சூஃபிசம் குறித்த அருமையான கலந்துரையாடலை துளிர் அமைப்பின் நிறுவனர் Mohamed Yusuf Ansari அவரது இல்லத்தில் நடத்தினார். சூஃபிகளின் பாடல்களைச் அவர்களே பாடினார்கள். தோழர் முத்துநாகு சிறப்புரையாற்றினார். சூபிகளின் தோற்றம் குறித்தும் பங்களிப்புகள் குறித்தும் பேசினார். பக்கிர்கள் மனிதர்களின் உடல், உள்ள நலன்களில் பெரும் அக்கறையோடு இருப்பவர்கள். அதற்கான மருத்துவ அறிவினைப் பெற்றவர்கள். சமூக நலம் காத்தவர்கள். பவுத்தத்திற்கும் சூஃப்பிகளுக்கும் தத்துவ மோதல், விஜயநகர ஆட்சியாளர்களான கம்பளத்து நாயக்கர்கள் கம்பளியில் அமர்ந்து நீதி வழங்குவது சூபிகளிடமிருந்து பெற்றது. கம்பளிக் கயிறு கட்டுவதும் பக்கிர்களிடமிருந்து தோன்றிய பழக்கமே. ஈரானியப் பகுதியில் கம்பளி உற்பத்தி பெருமளவு நடந்துள்ளது. உசிலம்பட்டி ஆனையூர் பகுதியில் மாசிப் பச்சை அன்று திருநீறு போன்று மருந்து பொடி கொடுப்பது இசுலாமிய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சைவ வைணவ கிராமப்புற கோயில்களில் ஆக்கிரமித்துள்ள கற்பூரம், சாம்பிராணி, பத்தி இவைகள் சூஃப்பிகளின் கொடை. இது மதமாச்சரியங்களை தாண்டிய உறவு. ரூமி என்ற சூபிக் கவிஞனின் முற்போக்குச் சிந்தனையின் வெப்பம் தாங்காமல் நாடு கடத்தப்பட்டான். இசுலாத்தின் நீர்த்துப் போகாத பகுதி சூபிசம். சுன்னத் என்பது நீர்த்துப்போதல் அல்ல. புதிய பிறப்பு. வங்கம் சூபிகளால் நிரம்பியது. அவர்களின் கலகக் குரலை ஒடுக்கவே ஆங்கிலேய அரசு அவர்களைக் குற்றப் பரம்பரையில் சேர்த்துக் கைது செய்து கொடுமைப்படுத்தியது. தமிழகத்தில் தொடங்கி திருவனந்தபுரம் வரையில் சூபிகளின் 69 ஜீவசமாதிகள் காணப்படுகின்றன. பல்வேறு மதங்களும் சாதிகளும் சமுதாயத்தில் இணக்கமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான சூழலை சூபிகள் உருவாக்கினர். சூபிகள் தன்னுணர்வு பெற்று வாழ்தலை வலியுறுத்தினர். இசையும் பாடலும் அவர்கள் வாழ்விற்கு மெருகூட்டின. ஆர்மோனியம் சூபிகளிடமிருந்துதான் வருகிறது. மராட்டிய பகுதியிருந்து தமிழகம் வந்த மராட்டியர்கள் கொடையான லாவணி பாடலான எசப்பாட்டு சூஃப்பிகளின் குர்க்கி பாடல்களே. கருநாடகத்தின் வடக்குப் பகுதியான தக்காணத்தின் பாண்டுரங்கன் இசைவடிவம் சூஃப்பி இசை என்கிறது ஆய்வு. மபக்கிர்கள் வறுமையிலும் அவலத்திலும் தற்போது வாடுகின்றனர. முற்போக்கான பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்களான இவர்கள் பிச்சைக்காரர்களைப் போன்று நடத்தப்படுவது சமூகப் பேரவலம். நிறைவுரையாகச் சிலவற்றை சோ. பிலிப் சுதாகர் பகிர்ந்து கொண்டார். சூபிசம் என்பது ஞானமார்க்கம். சோனகர் என்றறியப்படுவோர் இவர்களே. நபிகள் வரலாறும் இசுலாமிய விழுமியங்களும் இவர்களிடம் மையம் பெறுகின்றன. இவர்கள் பெரும் கலைஞர்கள். பேய் ஒட்டுதல், திருநீறு அளித்தல் என்பதெல்லாம் மனநோய்களிலிருந்து மனிதர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்கான அவர்களின் நல்வாழ்வு முயற்சிகள். அடக்கமும் ஆணவ மறுப்பும் இவர்களின் பண்புகள். இசுலாத்திற்குக் காலந்தோறும் புதிய பங்களிப்புகளை ஆற்றிய வர்கள் இவர்கள். மறுமை என்பது இக் கணத்தில் இன்புற்று வாழ்வது என்றே இவர்களிடம் விளக்கம் பெறுகிறது. 100 மசாலாக்கள் பாடல்கள் என்பது ஒவ்வொரு இலங்கைத் தமிழர் வீட்டிலும் இடம் பெற்றிருந்தது என்பது இவர்களின் இசைப் பாடல்கள் எந்த அளவிற்குச் சமூகமயமானவை என்பதற்கு எடுத்துக் காட்டு. நைல் நதி வற்றினால் அழகான பெண்ணை வெட்டிப் பலி கொடுக்கிற வழக்கம் இருந்து வந்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி மூடத்தனத்திலிருந்து மக்களைக் காத்து வந்துள்ளனர். ஒரு சூபி பெண் தனது ஒரு கையை எரித்துக் கொண்டு மற்றொரு கையில் நீர் நிறைந்த வாளியை எடுத்துக்கொண்டு மக்களிடம் செல்கிறார். நான் நரக நெருப்பை அணைத்துவிட விரும்புகிறேன். மக்கள் மோட்சம், நரகம் என்பதை நம்பித் திரியக்கூடாது. இந்த உலகில் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழவேண்டும். அடுத்த உலக மாயையைப் பெருமதங்கள் நிலைநிறுத்தி மக்களை முட்டாளாக்குகின்றன. சூபியம் நாம் சமய மோசடிகளிலிருந்து விடுபட வழிகாட்டுகிறது. இறைவனிடம் இவர்கள் மன்றாடும் போதுகூட நல்லறிவு வேண்டும் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது. அறிவியல் புள்ளிவிவரங்களால் பன்முகப்படும் மனித வாழ்வை அளவிட முடியாது. பன்மையம் என்பது இவர்களின் வாழும் முறை. கற்பனையாக மனிதர்களைச் சாதி சமயம் என்று பிரித்துக் கொண்டு அவதிப்படுகிறோம். பிரிக்கிறவற்றை வளர்க்கிறோம். இணைக்கிறவற்றை தகர்க்கிறோம். தான் என்பது அறவே இல்லை என்பது சூபிசம். பொருளை அதன் உண்மைத்தன்மையில் காண்பது அதன் தேடல். ஒருமையில் பன்மையும் பன்மையில் ஒருமையும் காண்பது இவர்களின் வாழ்வியல். பன்மைத்தன்மைகள் அழிக்கப்படுகின்ற காலத்தில் இவர்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றனர். சாவதற்கு முன்பு செத்துவிடு. கரைந்துவிடு. அறியாமையை அழி. உனக்கு அழிவில்லை. இருப்பது. இறப்பது என்று அனைத்தும் சூபிசத்தில் கேள்விக்குள்ளாகின்றன. அனைவரும் ஒன்று. ஒன்றில் அனைவரும். தன்னையறிதல் இறைவனையறிதல். நீ என்பது நீ அல்ல. நீ இருக்கவுமில்லை. இறக்கவுமில்லை. பிரிந்துமில்லை. சேர்ந்துமில்லை. தூரமும் இல்லை. நெருக்கமும் இல்லை. இறைவன் வேறு. நீ வேறு என்பது அறியாமை. சூபிசம் மிகப் பழமையானது. அந்ததந்தக் காலக்கட்டங்களில் சமூகச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்தது. இங்கு சாதியை எதிர்த்தது. மத்திய கிழக்காசிய அரேபியப் பகுதிகளில் குறுங்குழுவாதங்களை எதிர்த்தது. அமெரிக்க அய்ரோப்பியப் பகுதிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கெதிரான நிறவெறியை எதிர்த்தது. சூபிசம் இல்லையெனில் இசுலாத்தில் மறுமலர்ச்சி இல்லை. சூபிகள் வானிலை ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளனர் என் பல வியக்க வைக்கும் தகவல்களை தம் உரையின்போது வழங்கினார் நாவலாசிரியர் இரா.முத்துநாகு