Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றி கஷ்டங்கள் தீர்க்கும் நேரக்கோவில் காலதேவி ( must read description ) в хорошем качестве

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றி கஷ்டங்கள் தீர்க்கும் நேரக்கோவில் காலதேவி ( must read description ) 8 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றி கஷ்டங்கள் தீர்க்கும் நேரக்கோவில் காலதேவி ( must read description )

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றி கஷ்டங்கள் தீர்க்கும் நேரக்கோவில் காலதேவி காலதேவியின் காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,எனக்கு எது நல்லதோ அதைக் கொடு என உலகம் முழுவதும் பகலில் கோவில் திறந்திருக்கும் இரவில் நடை அடைக்கப்பட்டு விடும். இரவு முழுவதும் திறந்திருக்கும் கோவில் ஒன்று இருக்கிறது. அது காலதேவி அருள்பாலிக்கும் நேரக்கோவில். நம்முடைய நேரம் நல்ல நேரமாக மாற காலதேவியை வேண்டிக்கொண்டால் போதும் கவலைகள் தீரும், கஷ்டங்கள் மறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ அமைந்துள்ளது காலதேவி அம்மன் சிலை. நேரத்திற்காகவே கட்டப்பட்டுள்ளது இந்த காலதேவி அம்மன் கோவில். காலச் சக்கரத்தை இயக்கும் தலைவியாக அருள்பாலிக்கும் இந்த அம்மனின் கடைக்கண் பார்வை பெற்று விட்டால், கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறி விடும். நேரத்தை மாற்றும் கோயில் என்பதால் நேரக்கோயில் என அழைக்கப்படுகிறது. கால தேவியின் அம்மன் முன்பாக 11 நொடிகள் நின்று மனமுருகி நாம் வேண்டிக்கொண்டால் நம்முடைய கெட்ட நேரங்கள் நீங்கி நல்ல நேரமாக மாறும் என்பது நம்பிக்கை. இங்கு எண்கோண வடிவ கருவறை உள்ளது. விமானமும் எண்கோண வடிவில் செங்குத்தாக உள்ளது. காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் காலதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். காலையில் நடை திறந்து இரவில் சாத்துவது கோயில்களில் வழக்கம். இங்கு சூரியன் மறைந்த பின் மாலையில் தான் நடை திறக்கப்படும். இரவு முழுவதும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். காலதேவி என்ற பெயரில் வேறெங்கும் கோயில் இல்லாதது தனிச்சிறப்பு. அமாவாசை, பவுர்ணமி நாளில் யாகத்துடன் சிறப்பு பூஜை நடக்கும். மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டியை அடுத்த எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ளது சிலார்பட்டி. இந்த கிராமத்தில்தான் உள்ளது காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே நேரமே உலகம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. புராணங்களில் வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு. 11 நொடிகளில் காலச்சக்கரம் மாற்றும் ஸ்ரீ கால தேவி இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் வீற்றிருந்து கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார். இந்த கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற தெய்வங்களின் சிலை எதுவும் இந்த கோவிலில் இல்லை பவுர்ணமி, அமாவாசையில் பூஜை பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை கெட்ட நேரத்தை மாற்றும் அம்மன் நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். எங்கு எப்படி செல்வது காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,எனக்கு எது நல்லதோ அதைக் கொடு என வேண்டினால் போதும். மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்க வேண்டும். டி. கல்லுப்பட்டியில் இருந்து ஆட்டோவிலும் போகலாம். சாதாரண நாட்களில் செல்வதைவிட பவுர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு. By kathalan- Sathish

Comments