Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள் в хорошем качестве

தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள் 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள்

தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள்.....SRI KUBERALAKSHMI PADALGAL SUNG BY : BOMBAY SARADHA PRODUCED BY : G.JAGADEESAN KINDLY SUBSCRIBE OUR CHANNEL :    • தினமும் கேளுங்கள் செல்வமழை  பொழியும் ...   குபேரன் சான் அண்டொனியோ கலை அருங்காட்சியகத்தில் குபேரன் சிலை அதிபதி செல்வத்தின் அதிபதி, வடதிசையின் கடவுள் வகை தேவன், லோகபாலன் (திக்பாலன்) இடம் அலாகா மந்திரம் ஓம் கம் குபேராய நமக. ஆயுதம் கதை துணை யட்சி இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர். சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். [1] திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள். புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி, அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள். மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை. அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.

Comments