У нас вы можете посмотреть бесплатно Highlights | இயல் விருது விழா - 2023 | Iyal Award Ceremony - 2023 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது விழா - 2023 Tamil Literary Garden Iyal Award Ceremony - 2023 இயல் விருது - வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனையாளர் விருது R.பாலகிருஷ்ணன் புனைவு : A.M.றஷ்மி அல்புனைவு விருது : P.விக்னேஸ்வரன் கவிதை விருது : இளவாலை விஜயேந்திரன் மொழிபெயர்ப்பு விருது : ஜெகதீஷ்குமார் கேசவன் இலக்கியம், சமூகப்பணி விருது : பார்வதி கந்தசாமி 20-10-24 Toronto கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது 2023 விழா! இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் 'தமிழ் இலக்கியத் தோட்டம் ' விருதாகும். தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023-க்கான விருது ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.அவரது வாழ்நாள் சாதனைக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. ஓர் ஆய்வாளராக அவர் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி செய்திருக்கும் ஆய்வு, வரலாற்று ஆய்வு நோக்கில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் கூட்டுறவில் இயங்கி வருகிறது.இது உலகமெங்கும் பரந்து இருக்கும் தமிழை வளர்ப்பதற்காக, தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும்.கனடா அரசால் பதிவு செய்யப்பட்ட ஒரே தமிழ் இலக்கிய அறக்கட்டளை இதுவாகும். அரிய தமிழ் நூல்களை மீண்டும் பதிப்பித்தல், தமிழ் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்குதல், தமிழ்ப் பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கு செய்தல், கனடா நாட்டு நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ் நூல்களை அளித்தல் போன்ற சேவைகள் இதன் முக்கிய முன்னெடுப்புகளாகும். அமைப்பாகத் தோன்றி இயக்கமாக வளர்ந்திருக்கும் இந்த கனடா இலக்கியத் தோட்டம் மூலம் ஆண்டு தோறும் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள். இயல் விருது என்ற பெயரில் இந்த விருது வழங்கப்படும் .இது பாராட்டுக் கேடயத்துடன் 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. புனைவு, அல்புனைவு, கவிதை, தமிழ்த் தகவல் தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் இப்ப பரிசுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் சிறந்த மாணவருக்கு ஆயிரம் டாலர் புலமைப் பரிசில் என்கிற பெயரில்ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. டொரண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ் அறிஞர்களின் விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. அத்துடன் மறக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள நாட்டுக் கூத்து போன்ற பாரம்பரியத் தொல் கலைகளை மீட்டுப் புத்தாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. #TamilLiterature #literature #tamil #Writer #speaker #PublicSpeaking #speech #guestlecture #bookstagram #tamil #tamilspeech #essays #literature #travel #history #management #book #tamilauthors #poetry #poetrybook #tamilpoetry #bookstagram #tamilbookstagram #booksofinstagram #booksbooksbooks #tamilbookstagram #readersofindia #newreaders #newreader #booksrecommendation #bookstore #booksofinstagram #readersofinstagram #booklover #booksale #bookworm #bookaholic Join Membership - / @shrutitvlit