Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மஹாபரணி பித்ருக்களின் ஆசிதரும் மாத்ருஷோடஸி கயாவில் பிண்டம் வைக்கும்போது சொல்லும் மந்த்ரம் Mahabarani в хорошем качестве

மஹாபரணி பித்ருக்களின் ஆசிதரும் மாத்ருஷோடஸி கயாவில் பிண்டம் வைக்கும்போது சொல்லும் மந்த்ரம் Mahabarani 19 часов назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மஹாபரணி பித்ருக்களின் ஆசிதரும் மாத்ருஷோடஸி கயாவில் பிண்டம் வைக்கும்போது சொல்லும் மந்த்ரம் Mahabarani

#mahalayam #mahalayaspecial #mahalayaamavasya #mahalayapaksham #gaya #kasi #mathrushodasi #adishankaracharya #malayalam #மாத்ருஷோடஸி 1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || என்னைக் கர்ப்பத்தில் தாங்கிய படி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது என் தாய் வேதனைகளை அனுபவித் தாளே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன். 2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் என் தாய்க்கு என்னால் ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன். 3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || என் தாயின் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை எனக்குச் சேர்த்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன். 4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னைச் சுமந்தபோது அவளுக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க இப்பிண்டத்தைத் தருகின்றேன். 5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன். 6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச| தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாளே என் தாய், அவளுக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க, பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன். 7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன & ஆகாரமின்றி ஜடராக்னியின் (பசி என்னும் பெரு நெருப்பு) வெம்மையில் என் தாய் நொந்தாளே, அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்த கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன். 8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || இரவில் நான் என் தாயின் ஆடைகளை, மல மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன். 9. க்ஷ§தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || எனது பசி, தாகம் தீர்க்க (தனக்கு இல்லையென்றாலும்) அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாளே என் தாய், அவளை வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இப் பிண்டத்தைத் தருகிறேன். 10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || அல்லும் பகலும் என் தாயின் முலைப் பால் அருந்தும் போது அவளை நான் துன்புறுத்தினேனே, அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன். 11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || மாக மாதத்தில் சிசிர ருதுவில் கோடையில் என்னைக் காக்கத் தன் உடலை வருத்திக் கொண்டாளே என் தாய், அவளுக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன். 12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || மகன் நோய்வாய்ப்பட்டானே என்று கவலையால் வாடி இருந்தாளே என் தாய், அவளுக்கு விளைவித்த அந்த மனத் துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன். 13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || யமலோகம் செல்லும் என் தாய் கோரமானவற்றை யெல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன். 14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களது தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகின்றேன். 15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்குத் நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன். 16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய | தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் || கர்ப்பத்திலும், சிசுவாக இருந்த போதும் மரண வேதனையை ஒத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்த பிண்டத்தைத் தருகின்றேன்.

Comments