Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சிறுநீரக பிரச்சினை அறிகுறிகள்/சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்/சிறுநீர் பாதை நோய்தொற்று/JAFFNA MEDICAL в хорошем качестве

சிறுநீரக பிரச்சினை அறிகுறிகள்/சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்/சிறுநீர் பாதை நோய்தொற்று/JAFFNA MEDICAL 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சிறுநீரக பிரச்சினை அறிகுறிகள்/சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்/சிறுநீர் பாதை நோய்தொற்று/JAFFNA MEDICAL

#சிறுநீரக_பிரச்சினை_அறிகுறிகள் /#சிறுநீரக_செயலிழப்பு_அறிகுறிகள் /#சிறுநீர்_பாதை_நோய்தொற்று /JAFFNA MEDICAL சிறுநீரக_பிரச்சனைக்கு_தீர்வு சிறுநீரக_நோய்களின்_அறிகுறிகள் / கீழ்கண்ட அறிகுறிகள் நபருக்கு நபர் மாறும். ஒருவருக்கு அடிப்படையில் இருக்கும் பின்னணி நோய்களும் அவற்றின் தீவிரங்களும் இந்த மாற்றங்களைக் கொண்டு வரும். சிறுநீரகங்கள் பழுதாவதே முகம் வீங்கும் அறிகுறியால் தெரிவிக்கும் செய்தி. ஆனால் வெறும் வீக்கங்கள் மட்டுமே போதுமான அறிகுறிகள் அல்ல. ஒருசில மாதிரியான சிறுநீரக பழுதுகளில் முறையாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் கூட வீக்கங்களைக் கொண்டு வரும். (உதாரணத்திற்கு நெஃப்ராடிக் சின்ட்ரோம் போன்ற நோய் வகைகள்) . ஒரு சிலருக்கு அந்த வீக்கமே காணப்படாமல் போகலாம். ஆனால் சிறுநீரகங்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு பாழாகி இருக்கும். உயர்இரத்த அழுத்தம் - ஹைப்பர் டென்ஷன் சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவது சகஜம். இளம் வயதில் அதாவது 30 வயதிற்குள் இது ஏற்பட்டால் அல்லது மருத்துவர் சோதிக்கும்பொழுது உயர் இரத்த அழுத்தம் உறுதியானால், சிறுநீரகக் கோளாறுகளே அதற்குக் காரணமாக இருக்கலாம். இரத்தசோகையும் உடல்நலிவாதலும் உடல்நலிவு, ஆரம்ப வலிகள், கவனக் குறைபாடு ஆகியவை இரத்த சோகை உள்ளவர்களுள் தென்படும் பொதுவான அறிகுறிகளாகும். மிக மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும் பொழுது இது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகலாம். பொதுவான சிகிச்சைகள் மூலம் இரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லையெனில், சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதி செய்யலாம். எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள் கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும். வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து கொடுத்தல் - இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்பொழுது வரக் கூடிய அறிகுறிகள். சிறுநீரைப் பொறுத்த சில கோளாறுகள். சிறுநீர் சார்ந்த பொதுவான பிரச்னைகள் 1. சிறுநீரின் கன அளவு குறைதல் சிறுநீரக நோய்களின் பொதுவான அறிகுறியாகும் 2. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழிதலும், சிறுநீர் கழிக்கும்பொழுது இரத்தமும் சேர்ந்து போதல் அல்லது சீழும் சேர்ந்து வருதல் என்பன சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி. 3. சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்பு வலியை ஏற்படுத்தும் அல்லது சிறுநீர் அளவு மிகவும் குறைந்து துளித்துளியாக வெளி வரும். மிகவும் மோசமான நிலைகளில், சிறுநீர் கழிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும் மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டாலும் சிறுநீரக நோய் என்று முடிவுகட்டி விடக் கூடாது. இவ்வகை அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியமாகும். சோதனைகளைச் செய்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டும் முடிவுக்கு வருவது நல்லது. கடுமையான சிறுநீரக நோய்கள் உள்ளிருந்து கொண்டே தொடர்வது கூட சாத்தியம் என்பதை அவசியம் உணர்ந்தாக வேண்டும். இது நெடுநாட்களாகவே கூட நீடித்துக் கொண்டு இருக்கலாம். வெளிப்புறத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கலாம். இளம் வயதிலேயே, இரத்த அழுத்த நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், சிறுநீரக நோய் எதுவும் தாக்கவில்லை என்பதை முதலில் ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவும்.கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும். வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து கொடுத்தல் - இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்பொழுது வரக் கூடிய அறிகுறிகள். சிறுநீர் பாதை நோய்தொற்று’ அறிகுறி எப்படி இருக்கும் தெரியுமா? அதை தடுக்கும் வழிமுறைகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (Urinary Tract Infection) மிகவும் பொதுவான தொற்றுநோய்களாகும். பொதுவாக சிறுநீரகம், யுரீட்டர், சிறுநீர்ப்பை மற்றும் யுரீத்ரா இவை சேர்ந்துதான் சிறுநீரக அமைப்பை பூர்த்தி செய்கின்றன. தோல் அல்லது மலக்குடலில் இருந்து வரும் பாக்டீரியாக்கள், சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்து சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளை பாதிக்கும் போது UTI (Urinary Tract Infection) ஏற்படுகிறது. நோய்த்தொற்றுகள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் கூட காணப்படுகின்றன. சிறுநீர் வெளியேறும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இந்த தொற்று ஏற்படலாம். உடலிலேயே ஏற்படும் தொற்றுக்களில் இந்த தொற்றுதலே இரண்டாவது இடம் வகிக்கும் மிகவும் பொதுவான தொற்றுதல் ஆகும். குறிப்பாக பைலோனெப்ரிடிஸ் எனும் நோய் UTI காரணமாக ஏற்படும் சிறுநீரக தொற்று ஆகும். சிறுநீர் பாதை தொற்றுநோயின் அறிகுறிகள்: இந்த தொற்று சிறுநீரகத்தின் வெவ்வேறு உறுப்புகளை அடையும் போது வெவ்வேறு அறிகுறிகள் காணப்படுகின்றன. சிறுநீர்ப்பை நோய்த்தொற்றின் அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழிப்பது. சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் சிறுநீர் சிறிதே வெளி செல்லும். சிறுநீர் துவாரம் எரியும். *அடிவயிற்றில் தசைப்பிடிப்பு சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம். சிலர் வெகுவாய் சோர்ந்து இருப்பர். சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம். சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள்: அதிக காய்ச்சல் குளிர் மற்றும் நடுக்கம் கீழ் முதுகிலும், பின்புறத்தின் பக்கத்திலும் வலி குமட்டல் மற்றும் வாந்தி சிறுநீரில் ரத்தம் கலந்து இருக்கலாம். சிறுநீர்க்குழாய் நோய்த்தொற்றின் அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு. அதிக அளவு சிறுநீர் கழிப்பது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் பொதுவான மருத்துவ நிலைமைகள்: சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதையைத் தடுக்கும் போது UTI ஏற்படலாம். புற்றுநோய் அல்லது எச்.ஐ.வி காரணமாக ஒருவருக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்போது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வரலாம்.

Comments