Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆந்திர அரசியலில் புயலை கிளப்பும் லட்டு சர்ச்சை Chandra babu Naidu |Jegan Mohan reddy | Tirupati в хорошем качестве

ஆந்திர அரசியலில் புயலை கிளப்பும் லட்டு சர்ச்சை Chandra babu Naidu |Jegan Mohan reddy | Tirupati 6 часов назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆந்திர அரசியலில் புயலை கிளப்பும் லட்டு சர்ச்சை Chandra babu Naidu |Jegan Mohan reddy | Tirupati

#Partnership திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். கடந்த கால ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த தவறு நடந்ததாகவும் அவர் பகிரங்கமாக கூறினார். ஆனால் அரசியல் லாபங்களுக்காக முதல்வர் சந்திரபாபு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்தார். இந்த சூழலில் திண்டுக்கல் தனியார் நிறுவனம் அனுப்பிய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம் ஒப்புக்கொண்டது. அந்த நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து, வழக்கு பதிவாகி உள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் சந்திரபாபு போலியான தகவல்களைப் பரப்புவதாக ஜெகன் மோகன் மீண்டும் குற்றம் சாட்டினார். ஆந்திர முதல்வர் செய்த பாவத்தைப் போக்க மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு பூஜை நடத்துவார்கள் என்றும் அவர் அறிவித்தார். அத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபடவும் அவர் திட்டமிட்டிருந்தார். இன்று திருப்பதி வர இருந்த ஜெகன் திடீரென பயணத்தை ரத்து செய்தார். ஜெகன் மோகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவர் திருப்பதி கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் இறை படிவத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று கையெழுத்திட வேண்டும் என போலீசார் கூறியதாக தகவல்கள் பரவின. திருப்பதி பயணத்தை ரத்து செய்தது குறித்து ஜெகன் மோகன் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் அரக்கர்கள் ஆட்சி நடக்கிறது. திருமலை கோயிலுக்கு எனது வருகையை தடுக்க அரசு முயற்சிக்கிறது.# #TirupatiLadduControversy #ChandraBabuNaidu #JaganMohanReddy #AndhraPolitics #LadduScandal

Comments