Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஹம்பியைப் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள் | Amazing Facts about Hampi | Tamil Vox | History в хорошем качестве

ஹம்பியைப் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள் | Amazing Facts about Hampi | Tamil Vox | History 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஹம்பியைப் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள் | Amazing Facts about Hampi | Tamil Vox | History

இந்த ஹம்பி ஒரு விஜயநகர பேரரசோட நகரம். யுனெஸ்கோவால அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவோட உலக பாரம்பரிய தளங்கள்ள ஒன்னாவும் ரொம்ப பிரபலமா அறியப்பட்ட தொல்பொருள் இடங்கள்ள ஒன்னாவும் இருந்திட்டு வருது. இந்த இடத்தில அரச குடியிருப்புகள் அழகான கோவில்கள் சாலைகள் அப்பொறம் வியக்க வைக்கற சிலைகள்னு பாக்கறதுக்கு ரொம்பவே அழகா அமைஞ்சிருக்கு. இந்த பாரம்பரிய நகரம் துங்க்பத்ரா நதிக்கு பக்கத்தில அமைஞ்சிருக்கு. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமா இருந்திட்டு வர்ற ஹம்பிக்கு வருசம் முழுவதும் உலகத்தில எல்லா நாடுகள்ளையும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வர்றாங்க. இந்த சிறப்புமிக்க பண்டைய விஜயநகரமான ஹம்பியப் பத்தி தெரியாத சில சுவாரஸ்ய விசயங்கள இந்த வீடியோல பாக்கலாம். விட்டாலா கோயில் ரொம்பவே சிறப்பான கட்டமைப்புகள்ள ஒன்னா இருக்கு. இந்த பழமையான கோயில் அதோட அற்புதமான கட்டிடக் கலைக்கு ரொம்ப பிரபலமானது. அத விட இன்னொரு சிறப்பு இருக்கு இந்த விட்டாலா கோவிலுக்கு அதாவது இங்க அமைக்கப்பட்டிருக்கற இசை தூண்கள். இந்த இசைத் தூண்கள்ள தட்டும்போது இசை வெளிப்படறத நீங்க கேக்கமுடியும். விட்டலாங்கற கோவில்ல 56க்கும் மேல இசைத் தூண்கள் இருக்கு. அனா இப்போ 9 இசைத்தூண்கள் மட்டும் தான் செயல்படுது. விஜயநகரப் பேரரசோட மிகப்பெரிய நினைவுச்சின்னங்களோட இந்த ஹம்பி நகரம் இடிபாடுகளோட சிதறிக் கிடக்குது. இந்த ஒட்டுமொத்த கட்டுமானங்களும் கிரானைட் கற்களப் பயன்படுத்திக் கட்டப்பட்டிருக்கு. இந்தப் பிரமாண்டமான கற்கள வெட்டறதுக்கு அந்தக் காலத்து கலைஞர்கள் சுவாரஸ்யமான தந்திரத்த உபயோகிச்சு அந்த பிரமண்ட கற்கல கலை வடிவங்களா மாத்தி இருக்காங்க. ஒரு பாறைய வெட்டும்போது கல்லோட மேற்பரப்பில துளைகள் வரியா போடப்பட்டிருக்கு. அப்பொறம் காய்ந்த மரத்துண்டுகள கல்லோட துளைகள்ள இறுக்கமா போடப்பட்டு அந்த மரத்துண்டுகள் மேல தண்ணிய ஊத்தி நல்லா ஊரவைக்கப்பட்டிருக்கு. மரக் கட்டைகள் தண்ணீர்ல முழுவதுமா நனைஞ்சு விரிவடைஞ்சு உள்ள இருக்கற மரக்கட்டைகள் பெருசாகி அழுத்தம் காரணமா கல்லில விரிசல் விழுந்து உடஞ்சு போகுது. விஜயநகர சாம்ராஜ்யத்தால ஹம்பி நகரம் கட்டப்பட்டதுனு ஒரு தவறான கருத்து இருந்திட்டு வருது. இருந்தாலும் கூட ஹ‌ம்பில மக்கள் குடியேறினது முதலாம் நூற்றாண்டுகள்னு ஒரு வரலாறும் சொல்லப்படுது. அதாவது கிருஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டுகள்ள ஹம்பி மாவட்டம் அசோகனோட ராச்சியத்துக் கீழ இருந்ததா சான்றுகள் கிடைச்சிருக்கறதா தெரிவிக்கப்படுது. ஹம்பி வழக்கமா கிஷ்கிந்த ஷேத்ரானும் அழைக்கப்படுது. துங்கபத்ரா நதியோட பழைய பெயர்ல இருந்து பம்ப ஷேத்ரா இல்லைனா பாஸ்கரா ஷேத்ரா பெயர் வந்திருக்கனும்னு சொல்லப்படுது. இந்த ஆறோட தெற்கு கரையில தான் ஹம்பி நகரம் அமைஞ்சிருக்கு. ஹம்பிங்கற பெயர் கன்னட ஹம்பேல இருந்து வந்ததா சொல்லப்படுது. Subscribe -    / tamilvox   #hampi #Tamilvox #factsabouthampi #tamilhistory #historyintamil #tamil

Comments